அரபிக்குத்துக்கு எப்படி ஆடனும் தெரியுமா... கடலையே சூடாக்கிய பீஸ்ட் நாயகி
சென்னை : பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள அரபிக்குத்து பாடலுக்கு பிரபலங்கள் பலரும் ஆடி வரும் நிலையில், அந்த பாடலுக்கு எப்படி ஆட வேண்டும் என்பதை தானே ஆடி காட்டி அசத்தி உள்ளார் அந்த படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே.
Recommended Video
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி பாடல் வரிகளுக்கு அனிருத் இசையமைத்து, பாடி உள்ளார். அவருடன் சேர்ந்து டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை பாடிய ஜோனிக் காந்தி இந்த பாடலை பாடி உள்ளார்.

சாதனை படைத்த அரபிக்குத்து
காதலர் தின ஸ்பெஷலாக அரபிக்குத்து என டைட்டிலிடப்பட்ட ஹலமதி ஹபிபோ பாடலை சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டது. விஜய், பூஜா ஹெக்டே இணைந்து கலக்கிய இந்த பாடல் யூட்யூப்பில் செம ஹிட் அடித்துள்ளது. சோஷியல் மீடியாவில் திரும்பிய பக்கமெல்லாம் அரபிக்குத்து பாடலாக தான் உள்ளது. இந்த பாடல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

தீயாய் பரவும் பூஜா நடன வீடியோ
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலை போல் அரபிக்குத்து பாடலுக்கும் பிரபலங்கள் பலர் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பாடலில் நடித்திருந்த பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டேவே அரபிக்குத்து பாடலுக்கு அதே ஸ்டெப்பை போட்டு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மாலத்தீவு சென்ற பூஜா
பூஜா தற்போது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு தனது அம்மா, அப்பாவுடன் ஜாலியாக பொழுதை கழித்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் பூஜா. வழக்கமாக நடிகைகள் மாலத்தீவு சென்றால் அங்கு பிகினியில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிடுவார்கள். ஆனால் இவர் மாலத்தீவு சென்றதற்கு காரணமே வேறு.

இதுக்கு தான் மாலத்தீவு போனாரா
பூஜாவுக்கு பல்வேறு மருத்துவ மற்றும் தெரபி, ஹீலிங் முறைகள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாம். பல மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொண்ட பூஜா, தற்போது மாலத்தீவில் ஆயுர்வேதா மருத்துவ முறை, மூலிகைகள், அதனால் கிடைக்கும் எனர்ஜி பற்றி தெரிந்து கொண்டு வருகிறாராம். இங்கு அவர் ஆடிய அரபிக்குத்தை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்து வருகிறார்கள். மற்றொரு புறம் ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவரோ, மாலத்தீவில் ஆயுர்வேதாவில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

நடுக்கடலில் செம ஆட்டம்
மாலத்தீவில் தான் நடுக்கடலில் படகில் பயணம் செய்த படியே அரபிக்குத்து பாடலுக்கும் ஆட்டம் போட்டுள்ளார். அதோடு, இதே போல் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம் என கேப்ஷன் வேறு பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











