புட்டபொம்மா பாடலுக்கு இப்படியும் ஆடலாமா...தீயாய் பரவும் பூஜா ஹெக்டே வீடியோ

ஐதராபாத் : புட்டபொம்மா பாடலுக்கு வித்தியாசமான முறையில் பூஜா ஹெக்டே க்யூட்டாக நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள். இந்த வீடியோவிற்கு பிரபலங்கள் பலரும் லைக் தெரிவித்துள்ளனர்.

2020 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன் படம் ஆல வைகுண்டபுரமுலூ. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த இந்த படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ரூ.100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 2020 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி பொங்கல் ரிலீசாக இந்த படம் வெளியிடப்பட்டது.

ஹிட்டான புட்டபொம்மா

ஹிட்டான புட்டபொம்மா

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா மற்றும் சமஜவரகமனா பாடல் ஆகியன செம ஹிட் ஆகின. புட்டபொம்மா பாடல் இளைஞர்களின் மனம் கவர்ந்த பாடலாக மாறியது. இந்த படத்திலும் சரி, இந்த பாடலிலும் சரி அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான கெமிஸ்ட்ரி பலரின் பாராட்டையும் பெற்றது.

வாழ்த்தும் பிரபலங்கள்

இந்த படம் ரிலீசாகி நேற்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதற்காக திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்தனர். குடும்ப என்டர்டைன்மென்ட் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கும், புட்டபொம்மா பாடலுக்கும் இருக்கு மவுசு கொஞ்சமும் குறையவில்லை.

அட இப்படியும் ஆடலாமா

அட இப்படியும் ஆடலாமா

இந்நிலையில் மேக்அப் ரூமில் இருந்தபடியே புட்டபொம்மா பாடலுக்கு அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹாவுடன் இணைந்து உட்கார்ந்தபடியே நடனமாடி உள்ளார் பூஜா ஹெக்டே. மிக க்யூட்டாக இருவரும் இணைந்து ஆடி உள்ளதை So cute என பலரும் ரசித்து, பாராட்டி வருகின்றனர்.

நாங்க புதுசா கண்டுபிடிச்சிருக்கோம்

நாங்க புதுசா கண்டுபிடிச்சிருக்கோம்

இந்த வீடியோவுடன், ஆலா வைகுண்டபுரமுலூ ரிலீசாகி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது வரை அல்லு அர்ஜுனும் நானும் நடனமாடியதை நீங்கள் பார்த்துளீர்கள். இப்போது behind the scenes ஆக அர்ஹாவும் நானும் ஷுட்டிங்கின் போது நடனமாடி உள்ளோம். புட்டபொம்மா பாடலுக்கு யாரும் முயற்சிக்காத ஸ்டெப்பை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என நினைக்கிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

Recommended Video

Sai Pallavi-யும் நானும் ஒன்னு இல்லை | Pooja Kannan ரசிகர்களுக்கு வேண்டுகோள் | Chithirai Sevvanam
இத்தனை லைக்குகளா

இத்தனை லைக்குகளா

பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ள இந்த வீடியோ இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் இருவரில் யாருடைய ரியாக்ஷன் மற்றும் அழகை ரசிப்பது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். போகிற போக்கை பார்த்தால் புட்டபொம்மா பாடல் படைத்த சாதனையையே இந்த வீடியோ முறியடித்து விடும் போல என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X