»   »  வீட்டுல பூஜா, வெளியில சஞ்சனா!

வீட்டுல பூஜா, வெளியில சஞ்சனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கொக்கி சஞ்சனாவின் உண்மையான பெயர் பூஜா காந்தி என்பது நிறைய பேருக்குத் தெரியாது. வீட்டில் பூஜா என்றும் வெளியில் சஞ்சனாவாகவும் 'இரட்டை வாழ்க்கை' வாழ்ந்து வருகிறார் பூஜா @ சஞ்சனா.

Click here for more images

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் ரெவ்வண்டு பெயர்கள் இருப்பது புதிதல்ல. எஸ்.ஜே.சூர்யாவின் நிஜப் பெயர் ஜஸ்டின். நிறையப் பேருக்கு இது தெரியாது. அப்பா பெயரான சம்மனசுப் பாண்டியனை சேர்த்து, சினிமாவுக்காக எஸ்.ஜே.சூர்யா என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோல நடிகர் சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன். சினிமாவுக்காக சூர்யா ஆனார். கரணின் நிஜப் பெயர் ரகு. இந்தியைக் கலக்கிக் கொண்டிருக்கும் நிஷா கோத்தாரி, தமிழில் கொஞ்ச காலத்திற்கு முன்பு அமோகாவாக உலா வந்தார்.

கென்னி என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. அதுவே சீயான் விக்ரம் என்றால் 'ஓ' போடுவார்கள். கென்னிதான் விக்ரமின் நிஜப் பெயர். விஜய் ஜோசப் என்றால் யாருக்கும் தெரியாது. அதுவே இளையதளபதி விஜய்யை ப்ரீ.கே.ஜி. குழந்தைகளுக்கும் தெரியும்.

இப்படி இரட்டை வேடம் போட்டுக் கலக்குபவர்கள் பட்டியல் மிகப் பெரியது. அந்த பட்டியலில் கொஞ்ச நாளைக்கு முன்பு இணைந்தவர்தான் சஞ்சனா.

இவரது முதல் படம் கொக்கி. இதில் பூஜா காந்தி என்ற பெயரில்தான் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் ஏற்கனவே ஒரு பூஜா, கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பதால், பெயர்க்குழப்பம் ஏற்படும் என்று கூறி மாற்றச் சொன்னார்கள். இதனால் தனது பெயரை சஞ்சனா என்று மாற்றிக் கொண்டார் பூஜா காந்தி.

கொக்கி பெரும் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கன்னடத்திற்குத் தாவினார். அங்கு முங்காரு மலே என்ற படத்தார். படம் சூப்பர் ஹிட். கன்னடத்தில் அது மெகா ஹிட்டாம். இதுவரை இல்லாத அளவுக்கு பல சாதனைகளைச் செய்துள்ளதாம்.

இரு மொழிகளில் தான் நடித்த முதல் படங்கள் சூப்பர் ஹிட் ஆனதில் சஞ்சனாவுக்கு ரொம்ப சந்தோஷமாம். எனவே இரு மொழிகளிலும் இங்கு ஒரு படம், அங்கு படம் என மாறி மாறி நடிக்கப் போகிறாராம்.

சரி சஞ்சனா, உங்களை வீட்டில் எப்படிக் கூப்பிடுகிறார்கள் என்று கேட்டால், வீட்டில் நான் எப்போதுமே பூஜாதான் என்று செல்லமாக சிணுங்கினார் பூஜா.

சோனியா காந்தி, ராகுல் காந்தி போல நீங்களும் பெரிய ஆளாயிடுங்க பூஜா!

Read more about: pooja sanjana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil