»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அமோகாவை விட அதில் இரண்டாவதுஹீரோயினாக நடித்த பூஜாவுக்குத் தான் ஏகத்துக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

மீண்டும் சரண் தான் இயக்கும் படத்திலேயே பூஜாவுக்கு வாய்ப்பு தந்துள்ளார்.

அதுவும் அஜீத்துக்கு ஜோடியாக.அட்டகாசம் என்ற இந்தப் படத்தில் முதலில் ஹீரோயினாக இருந்தது அமோகா தான்.

ஆனால், கடைசி நேரத்தில் அவரைக் கழற்றிவிட்டுவிட்டு பூஜாவை புக் செய்துள்ளார்கள்.

அமர்க்களம் படத்துக்குப் பின் சரணில் இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார்.

இதில் டிரைவிங் ஸ்கூல் நடத்துபவராகநடிக்கிறாராம் அஜீத்.

இவரிடம் டிரைவிங் பழக வரும் பூஜாவுடன் காதல், அதைத் தொடர்ந்து குடும்பங்கள் மேதால்என போகிறதாம் கதை.

அட்டகாசம் படம் தவிர பூஜாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு முக்கியமான படம் ஜித்தன். இந்தப் படத்தைராதிகாவின் ராடன் டிவி நிறுவனமும், ரங்கீலா படத்தை இயக்கிய ராம்கோபால் வர்மாவும் இணைந்துதயாரிக்கிறார்கள்.

மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தின் ஹூரோ சூப்பட் குட் பிலிம்ஸ்ஆர்.பி.செளத்ரியின் அடுத்த மகன் ரமேஷ்.

முதல் மகன் ஜீவாவை வைத்து செளத்ரி தயாரித்த எந்தப் படமும்ஓடவில்லை. இதையடுத்து அடுத்த மகனை களமிறக்கியுள்ளார்.

இதில் கவர்ச்சிக்காகத் தாம்மா உன்னை ஹீரோயினா போட்டிருக்கோம் என்று சொல்லியே பூஜாவை புக்செய்திருக்கிறார்கள்.

அவரும் விசனப்படாமல் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இத்தாலி, வெனிஸ், ஆஸ்திரேலியாஎன பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

படத்தை ஒரே நேரத்தில் 4 மொழிகளில் எடுக்கிறார்களாம். தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தான மியூசிக்.

இந்த இரு தெலுங்குப் படங்களும், ஒரு தமிழ்ப் படமும் பூஜாவின் வசம் கைசவம். ஜேஜேயில் அமோகாவை தூக்கிவைத்து ஆடிவிட்டு என்னை ஓரம் கட்டிவிட்டார்களே என்று கலங்கினேன்.

ஆனால், இப்போது அந்தக்கவலையெல்லாம் பறந்து போச் என்கிறார் பூஜா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil