»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜே.ஜே படத்தில் அமோகா, பூஜா என்று இரண்டு கதாநாயகிகள் அறிமுகமானார்கள். படம் வெளிவருவதற்கு முன்பே அமோகாகுறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. படம் சம்பந்தமாக வெளிவந்த போட்டோக்களில் எல்லாம் அமோகாவின் அழகுமுகம்தான் இருந்தது.

ஏராளமான தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனால், படத்தில்அமோகாவின் நடிப்பு படு சொதப்பலாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் ஜகா வாங்கினார்கள்.

அதே நேரத்தில் பூஜாவின் குறும்பு கொப்பளிக்கும் நடிப்புக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்தது.

இதனையடுத்துதயாரிப்பாளர்களின் பார்வை பூஜா பக்கம் திரும்பியது. குறிப்பாக தெலுங்குப் பக்கம் அவருக்கு அதிகமாகவே ஈர்ப்பு இருந்தது.

இதனால் பல தெலுங்குப் படங்களில் புக் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் கைவசம் இப்போது 2 தமிழ் படங்கள்.

ஜே.ஜே படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் சரண் பூஜாவுக்கு வாய்ப்பளித்துள்ளார். அஜீத்குமார் கதாநாயகனாகநடிக்கும் அட்டகாசம் படத்தில் பூஜாதான் கதாநாயகி.

அஜீத்ர், சரண், பரத்வாஜ் கூட்டணி காதல் மன்னன், அமர்க்களம் ஆகியவெற்றிப்படங்களைத் தந்த கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு டிரைவிங் ஸ்கூல் நடத்துபவராகவும், பிரபல தாதாவாகவும் எனஇரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். டிரைவிங் ஸ்கூல் அஜீத்துக்குத்தான் பூஜா ஜோடி. பூஜாவுக்கு அஜீத் டிரைவிங்சொல்லிக் கொடுக்கும்போது, கூடவே காதல் பற்றிக் கொள்கிறதாம்.

பூஜா நடிக்கும் இன்னொரு படம் உள்ளம் கேட்குமே. நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வரும் இந்தப் படத்தைஇயக்குவது 12பியை இயக்கிய ஜீவாதான்.

ஜீவாவின் முதல் படத்தில் அறிமுகமாகிய ஷாம்தான் இந்தப் படத்துக்கும் ஹீரோ.

இந்தப் படத்தில் ஆஷின், லைலா, பூஜா என மூன்று கதாநாயகிகள். மூவரில் பூஜா தான் கவர்ச்சியில் புகுந்துவிளையாடியிருக்கிறாராம்.

பூஜாவுக்கு மிகவும் கிக்கான ரோலாம். இதனால் கவர்ச்சி கலவரமே நடத்தி முடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்திருக்கிறது. இந்தப் படம் ரிலீஸ் ஆனால் தமிழில் தனக்கு மேலும் பல கவர்ச்சிகரமான ரோல்கள்கிடைக்கும் என்று காத்திருக்கிறார் பூஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil