»   »  பூப் போல பூனம்

பூப் போல பூனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முரட்டுத் தெலுங்குத் திரையுலகிலிருந்து சாயங்காலம் பூத்த அல்லி போல அழகான தேவதையாக வந்திறங்கியுள்ளார் பூனம் பைவா.

பைவா யார் என்பது குறித்து நமக்குக் கவலையில்லை. ஆனால் பூனத்தைப் பற்றிக் கண்டிப்பாக நாலு வார்த்தை நச்சென்று சொல்லியே ஆக வேண்டும்.

சுள்ளான் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் பொல்லாதவன் படத்தில் அவருக்கு ஜோடி போடத்தான் ஹைதராபாத்திலிருந்து கிளம்பி வந்துள்ளார் பூனம். பூனை மாதிரி படு அழகாக இருக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாகி வரும் இளம் நடிகை. பாஸ் ஐ லவ் யூ படத்தில் படு கிளாமராக, கிறக்கமாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தவர். அவருடன் அப்படத்தில் நடித்தவர் நாகார்ஜூனா (இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி வருகிறது).

பிறகு நவ்தீப்புடன் (இளவட்டம் படத்தில் ஷீலாவுடன் சில்மிஷமாக நடித்தாரே அவரேதான்) பிரேமண்டே இன்டே என்ற படத்திலும் துள்ளி விளையாடியுள்ளார். தெலுங்கு ரசிகர்களை உலுக்கியது போதாதென்று, இப்போது பொல்லாதவன் மூலம் தமிழ் ரசிகர்களையும் தத்தளிக்க வைக்க வருகிறார்.

கிளாமருக்கு அஞ்சேல் என்று புதுமொழி சொல்லும் பூனம், கவர்ச்சியான ரோல் என்றால் கண்கள் விரிய சிரித்தபடி டபுள் ஓ.கே. சொல்கிறாராம். இதை உணர்ந்த பொல்லாதவன் இயக்குநர் வெற்றிமாறன், பூனத்திற்காக சில ஸ்பெஷல் காட்சிகள யோசித்து வைத்துள்ளாராம்.

படத்தைப் பத்தி சொல்லுங்கண்ணா என்று வெற்றி மாறனின் வாயைக் கிண்டினோம். இது இளைஞர்களுக்கான படம் (இப்பெல்லாம் யாருங்கண்ணா, முதியவர்களுக்காக படம் எடுக்கிறாங்க, மேட்டருக்கு வாங்கண்ணா). தனுஷிடமிருந்து இளைஞர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எனவே அதற்கேற்றார்போல திரைக்கதை அமைத்துள்ளேன்.

ரஜினி சார் நடித்த படத்தின் தலைப்பு பொல்லாதவன் என்றாலும், அந்தப் படத்துக்கும், இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படத்தில் தனுஷுக்கு பிளேபாய் கேரக்டர். அதற்கு பொல்லாதவன் என்ற தலைப்பு பொருந்தும் என்பதால் ரஜினியிடம் போய்க் கேட்டோம். உடனே சம்மதித்து விட்டார்.

படத்தில் ஆக்ஷனும், ரொமான்ஸும் சரி விகிதமாக கலந்து தரப்பட்டிருக்கும். இப்போது தனுஷ் நடிக்கவுள்ள யாரடி நீ மோகினி முடிந்த பின்னர் இப்படம் தொடங்கும். வெயில் புகழ் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் என்றார் மாறன்.

சரி அத விடுங்க. சமீபத்தில் பூனத்தையும், தனுஷையும் வைத்து போட்டோ செஷன் நடத்தினர். இதில் தனுஷை வைத்து எடுத்த படங்களை ரிலீஸ் செய்து விட்டார்கள். ஆனால் பூனத்தை வைத்த சுட்ட போட்டோக்களை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.

காரணம், அத்தனையும் ஆச்சி மசாலா ரேஞ்சுக்கு படு காரசாரமானவையாம். படத்திற்குப் பூஜை போடும்போது இந்தப் படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

இதில் சூப்பர் மேட்டர் என்னவென்றால் பூனத்தை முதலில் சிம்புதான் தனது கெட்டவன் படத்துக்காக அப்ரோச் செய்துள்ளார். ஆனால் நயனதாரா தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வந்து தொலைக்க வேண்டாம்பா, விட்டுடுங்கப்பா என்று எஸ்கேப் ஆகி விட்டாராம் பூனம்.

தனுஷுடன் நடித்தால் சேதாரம் அதிகம் இருக்காது என்பதால் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம். மாப்பிள்ளையப் பிடிச்சாச்சு, அப்படியே மாமாவையும் பிராக்கெட் போட்டுட வேண்டியதுதானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil