»   »  ஜீவாவுடன் பூனம்

ஜீவாவுடன் பூனம்

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் அதகளப்படுத்தி வரும் பூனம் பஜ்வா, ஜீவாவுடன் இணைந்து தெனாவெட்டு படத்தில் நடிக்கிறார்.

மும்பை இறக்குமதி பூனம். நல்ல பொலிவோடு, ஜொலி ஜொலிக்கும் பூனம், தனுஷ் நடிக்கும் பொல்லாதவன் படத்தில் ஜோடியாக நடிக்க புக் ஆனார். ஆனால் நடிக்கும் முன்பே ஏகப்பட்ட லொள்ளு செய்ததால், அவரைத் தூக்கி விட்டு காஜல் புக் ஆனார்.

முதல் படமே சொதப்பி விட்டதால் அப்செட் ஆகியிருந்தார் பூனம். இருந்தாலும் கைவசம் இருந்த தெலுங்குப் படங்களில் சுழன்று சுழன்று நடித்து வந்தார்.

இந்த நிலையில் இன்னொரு தமிழ்ப் பட வாய்ப்பு பூனத்தைத் தேடி வந்துள்ளது. ஜீவா நடிக்க இருக்கும் தெனாவெட்டு படத்தில் நாயகியாக பூனம் பேசப்பட்டுள்ளார்.

தற்போது ஜீவா தமிழ் எம்ஏ, ராமேஸ்வரம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த விட்டு தெனாவெட்டு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார்.

தெனாவெட்டைக் குறைத்துக் கொண்டால் பூனம் பஜ்வாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகில் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Please Wait while comments are loading...