»   »  எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க!- பூனம் பாஜ்வா மறுப்பு

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க!- பூனம் பாஜ்வா மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு திருமணமாகிவிட்டதாக வந்த செய்தி பொய்.. அதை நம்ப வேண்டாம் என்று நடிகை பூனம் பாஜ்வா தெரிவித்தார்.

சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகை பூனம் பாஜ்வா விற்கு திருமணம் நடந்துவிட்டதாக செய்தி வெளியானது.

Poonam Bajwa denies marriage reports

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை பூனம் பாஜ்வா, 'அது முற்றிலும் தவறான செய்தியாகும். சமீபத்தில் எனது தங்கைக்குத் தான்,திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர்.

எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில்,வெகு சிறப்பான முறையில் நடைபெறும்', என்றார்.

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்பட பல படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா.

இப்போது குண்டு கத்திரிக்காய், போகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Actress Poonam Bajwa has denied reports on her marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil