கட்டுனா அவள கட்டணும்..பூனம் பாஜ்வாவுக்காக காத்திருக்கும் 7ம் வகுப்பு மாணவன்!

சென்னை : நடிகை பூனம் பாஜ்வாவுக்கு 7ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்ஸ்டாகிராமில் திருமண ப்ரபோஸ் செய்துள்ளார்.

அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ராணியாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்துவித்தார்.

இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

நடிகை பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா

ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் பூனம் பாஜ்வா. இவர் நடித்த முதல் திரைப்படமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கு கதை அம்சம் கொண்ட படமாக இருந்தது. இந்த படத்தில் இவரின் நேர்த்தியான நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

ஜீவாவுடன் இருபடங்களில்

ஜீவாவுடன் இருபடங்களில்

முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஜீவாவுடன் நடித்தார். ஜீவா மற்றும் பூனம் பாஜ்வாயின் கெமிஸ்டிரி பக்காவாக ஓர்க் அவுட்டாகி இருந்தது. இந்த திரைப்படங்கள் இவருக்கு ஓரளவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்தார்.

படவாய்ப்பு இல்லை

படவாய்ப்பு இல்லை

திடீரென இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தார். ஜெயம் ரவி,ஹான்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் திரைப்படத்திலும், சுந்தர் சியின் முத்துனக்கத்திரிக்காய் திரைப்படத்திலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி, கை நழுவிய வாய்ப்பை மீண்டும் பெற்றுவிட முயற்சி செய்தார்.

கவர்ச்சி புயலாக மாறினார்

கவர்ச்சி புயலாக மாறினார்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். பூனம் பாஜ்வா தமிழில் கடைசியாக ஜிவி பிரகாஷூடன் குப்பத்துராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாய், கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இவருக்கு சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

திருமண ப்ரோபோசல்

திருமண ப்ரோபோசல்

நடிகை பூனம் பாஜ்வா மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பூனம் பாஜ்வா, ஒரு சுவாரசியமான காதல் கதையை கூறியுள்ளார். அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார்.

கட்டுனா அவள கட்டணும் டா

கட்டுனா அவள கட்டணும் டா

அதில், உங்களை எனக்கு பிடிக்கும். நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்காக காத்திருக்கிறேன், எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்கள், எனக்கு வயது வித்தியாசம் ஒன்றும் பிரச்சனை இல்லை. என் அம்மாவை சமாளித்துவிட்டேன். திருமணத்திற்கு பின்னும் நீங்கள் தாராளமாக கிளாமராக நடிக்கலாம் என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டதாக கூறியிருந்தார். பூனம் பாஜ்வாய் சொன்ன இந்த ததவலை கேட்டு கலி முத்திடுச்சி வேற என்ன சொல்வது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X