»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிகிதா, ரக்ஷிதா, நமிதா என தமிழுக்கு சம்பந்தே இல்லாத பல பெயர்களுடன் பல மாநில பிகர்களும் தமிழ்சினிமாவை ஆக்கிரமித்துள்ள நிலையில் தான் அறிமுகப்படுத்தும் கதாநாயகிக்கு பூங்கோதை என்ற அழகியபெயருடன் அறிமுகப்படுத்துகிறார் பி.சி.ஸ்ரீராம்.

அவர் இயக்கி வரும் வானம் வசப்படும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இந்த பூங்கோதை.

திரையுலகில் ஒளிப்பதிவாளர்களுக்கு மரியாதை வந்ததே பி.சி.ஸ்ரீராமின் வருகைக்குப்பின்புதான்.மணிரத்னத்துடன் இணைந்து மெளனராகம், அக்னி நட்சத்திரம் படங்களுக்கு இவர் அமைத்த ஒளிப்பதிவு இந்தியஅளவில் பேசப்பட்டது.

காட்சிகளை ஒளிகளாலும் பேச வைத்தவர். ஆனால், இருட்டில் படமெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை சி சென்டர்ரசிகர்கள் இப்போதும் இவர் மீது புகார் சொல்வது வழக்கம். இப்போதுள்ள ஒளிப்பதிவாளர்களில் ஜீவா,ராஜீவ்மேனன் உள்ளிட்ட பலர் இவரது பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே.


மீரா, குருதிப்புனல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பி.சி.ஸ்ரீராம் சுமார் ஒரு வருடத்துக்கு முன் தொடங்கியப்ராஜெக்ட் தான் வானம் வசப்படும். ஏதேதோ காரணங்களால் படப்பிடிப்பு நின்று, நின்று வளர்ந்தது. இப்போதுஎல்லா பிரச்சனைகளும் தீர்ந்து சூட்டிங் மீண்டும் வேகம் பிடித்துள்ளது.

ஆர்.கே.பிலிம் டிஜிட்டல் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜான்சன், ஜெயபிரகாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில்கார்த்திக்குமார், பூங்கோதை சந்திரஹாசன் என இருவர் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் நாசர், விஜய்குமார், வி.எம்.சி.ஹனிபா, தலைவாசல் விஜய், விஜய் ஆதிராஜ், ரேவதி, கோவை சரளா,ஜானகி சபேஷ், கூத்துப் பட்டறையை சேர்ந்த ரஞ்சித் பீம்சிங், அவினாஷ், உமர், சங்கர் சுந்தரம், மணிநாகசுப்பிரமணியம், ரவிபிரகாஷ், அஜெயன் பாலா, ஷாம் மற்றும் பாஸ்கி, டாக்டர். லதா டிரஸ்டினா என பெரும்பட்டாளமே நடிக்கிறது.

மறைந்த இசையமைப்பாளரும், கமல்ஹாசனின் நெருங்கிய நண்பருமான மகேஷ் மகாதேவன் கடைசியாகஇசையமைத்த இந்த படத்துக்குத்தான். பாடல்கள் வைரமுத்து. படப்பிடிப்பை அலெப்பி, வாகமான், குமாரகம் மற்றும் அங்கமாலி என கேரளத்தின் பல பகுதிகளில்படமாக்கியுள்ளார் பி.சி.

கதை சுஜாதாவுடையது. ஒளிப்பதிவும் ஸ்ரீராம் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil