யப்பப்பா...மேடையில் முத்தமிட்டு, கன்னத்தை கடித்து... வைரலாகும் பூர்ணா வீடியோ
சென்னை : தென்னிந்திய மொழி சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் பூர்ணா. சாம்னா காசிம் என அழைக்கப்படும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் கார்த்திக் நரேன் இயக்கிய Project Agni படத்தில் நடித்தார்.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு அர்ஜுனன் காதலி, கொடைக்கானல், துரோகி, ஆடு புலி, சகல கலா வல்லவன், மணல் கயிறு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது படம் பேசும், அம்மாயி ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த தலைவி படம் ரிலீசாகி, இவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரோலில் தான் பூர்ணா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகமாக பட வாய்ப்புக்கள் வருவதால் அங்கேயே செட்டில் ஆகி விட்டார். தெலுங்கில் த்ரிஷ்யம் 2 ரீமேக்கிலும் முக்கிய ரோலில் பூர்ணா நடித்து வருகிறார்.வெப் சீரிஸ்களிலும் நடித்து, பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
படங்களில் நடிப்பதுடன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பல காலமாக நடுவராக இருந்து வருகிறார். தெலுங்கில் ETV.,யில் ஒளிபரப்பாகும் Dhee Champions ஷோவிலும் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பூர்ணா நடந்து கொள்ளும் விதம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் சிறப்பாக பங்கேற்கும் போட்டியாளர்களை பாராட்டும் விதமாக, மேடைக்கு ஓடிச் சென்று, முத்தம் கொடுத்தும், கன்னத்தில் கடித்தும் வருகிறார். சமீப காலமாக இதனை தனது ஸ்டைலாக கடைபிடித்து வருகிறார் பூர்ணா.
இந்த வீடியோக்களை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, இப்படி தான் ஒரு நடுவர் நடந்து கொள்வதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நடுவர் பண்ற காரியமா இது என பல விதங்களில் கேள்வி கேட்டு, கடுமையாக பூர்ணாவை விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications