»   »  பூர்ணிதாவுக்கு புது வாய்ப்பு

பூர்ணிதாவுக்கு புது வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil
Kalyani
வாலிப வயதை எட்டியும், ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தும் சரிவர பிக்கப் ஆகாமல் தவித்து வரும் பூர்ணிதாவுக்கு ஷாமுடன் சேர்ந்து நடிக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கல்யாணி என்ற பெயருடன் சின்னப் பாப்பாவாக சில படங்களில் நடித்த பூர்ணிதா, டிவி சீரியல்களிலும் தலை காட்டி வந்தார். வாலிப வயதை எட்டியதும் அவருக்கு ஹீரோயினாகும் ஆசை எட்டிப் பார்த்தது.

இதனால் சின்னத் திரைக்கு முழுக்குப் போட்டு விட்டு சினிமாவுக்குத் தாவினார். 'பிரதி ஞாயிறு ..' படத்தில் நாயகியாக நடித்து கலக்கினார்.

ஆனால் அதன் பின்னர் தமிழில் அவருக்கு சரியான வரவேற்பு இல்லை. பொறுத்துப் பார்த்த பூர்ணிதா, அப்படியே தெலுங்குக்கும், மலையாளத்திற்கும் தாவினார். தெலுங்கில் இரு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது பரம சந்தோஷமடைந்தார்.

இதே போல மலையாளத்தில் நவ்யா நாயருடன் எஸ்.எம்.எஸ். என்ற படத்திலும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் சின்னச் சின்ன வேடம்தான்.

இப்போது தமிழில் அவருக்கு சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது ஷாமுடன் இணைந்து நடிக்கும் பட வாய்ப்பு.

ஷாம் நாயகனாக நடிக்கும் இன்பா படத்தில் அவருடன் இணைந்து நடடிக்கிறார் பூர்ணிதா. அதேசமயம் படத்தின் நாயகி சினேகா. பூர்ணிதா வரும் காட்சிகள் பிளாஷ் பேக் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இன்பா வாய்ப்பு சின்ன வாய்ப்பாக இருந்தாலும் தமிழில் ஒரு பெரிய நடிகருடன் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பு என்பதால் கிடைத்த வேடத்தில் புகுந்து கலக்கிவிட தீவிரமாக உள்ளாராம்.

பூர்ணிதாவுக்கு இன்பா, இன்பம் தரட்டும்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil