»   »  பிறந்த நாள்... போப் ஆண்டவரிடம் நேரில் ஆசி பெற்ற நயன்தாரா!!

பிறந்த நாள்... போப் ஆண்டவரிடம் நேரில் ஆசி பெற்ற நயன்தாரா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது பிறந்த நாளான நேற்று வாடிகனில் உள்ள போப் ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்பவர் நயன்தாரா.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன். ஹரி இயக்கிய அய்யா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்த படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார்.

Pope Francis blessed Nayanthara

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து ‘லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.

நேற்று 31 வயதில் அடியெடுத்து வைத்த நயன்தாரா, தனது பிறந்தநாளையொட்டி போப் ஆண்டவரைச் சந்தித்து ஆசி பெற விரும்பினார். இதற்காக, கடந்த 13-ந் தேதி அவர் ரோம் நகருக்குச் சென்றார்.

கடந்த 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போப் ஆண்டவர் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில், பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது அவரிடம் நயன்தாராவும் ஆசி பெற்றார்.

போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றபின், அவர் வெனிஸ் நகருக்குச் சென்றார்.

English summary
Actress Nayanthara has got birthday blessings from Pope Francis at Vatican City on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil