»   »  ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியுடன் நடிக்க வேண்டும்.. - இந்திய சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் சொல்வது இந்த வாக்கியத்தைத்தான்.

அப்படிப்பட்ட ரஜினியுடன் நடிக்க ஒரு நடிகை மறுத்துவிட்டார். அவர் வைஜெயந்தி மாலா.

மூத்த கலைஞர்களை மதிப்பதில் ரஜினிக்கு நிகரில்லை. அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அவர்களை தனது படங்களில் இடம்பெற வைப்பார் ரஜினி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நான் வாழவைப்பேன், ஜஸ்டிஸ் கோபிநாத் போன்ற படங்களில் நடித்தவர், தான் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அதே சிவாஜியை விடுதலை, படிக்காதவன், படையப்பா போன்ற படங்களில் கவுரவமான வேடங்களில் நடிக்க வைத்தார்.

Popular actress denied to act with Rajini

ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வடிவுக்கரசு, மனோரமா, பண்டரிபாய், விகே ராமசாமி, அசோகரன், சாவித்திரி, விஜயகுமாரி, கே ஆர் விஜயா, முத்துராமன், ஜெமினி கணேசன் என பல மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இப்படி பலருடன் நடித்து வந்த ரஜினி, தனது ஒரு படத்தில் நடிகை வைஜயந்தி மாலா நடிக்க வேண்டும் என விரும்பினார். மும்பையில் வெளியான ஒரு பத்திரிகையில் கண்ணாடி அணிந்து மிகவும் அலட்சியமாக வைஜெயந்திமாலா திரும்பி பார்க்கும் ஒரு புகைப்படத்தைக் கண்டார் ரஜினி.

நண்பர் சிரஞ்சீவியிடம் அந்த புகைப்படத்தை காட்டி, "ஒரு போட்டோவிலேயே அந்த கேரக்டரைக் காட்டுகிறார் பாருங்க.. நம்ம அடுத்த படத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும். அதற்கேற்ப ஆக்டிங் ஸ்கோப் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்," என்றாராம் ரஜினி.

உடனே அதற்கான கதை விவாதம் முடிந்து, ரஜினிக்கு இணையாக ஒரு வேடமாக அமைத்தனர். படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க முடிவானது.

வைஜயந்தி மாலாவிடம் தங்களுடன் ரஜினி நடிக்க விரும்புவதாக சொல்லப்பட்டது. அதன்பின் அவரிடம் அப்படத்தின் கதையையும், அவருடைய கதாபாத்திரத்தையும் சொல்லப்பட்டது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பணமா பாசமா படத்தில் ஜெமினி, எஸ்.வரலட்சுமி மாப்பிள்ளை, மாமியாராக நடித்தது போல் அமைய வேண்டும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் வைஜயத்ந்தி மாலா அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சிரஞ்சீவி நேரில் வந்து கேட்டார். ரஜினியும் அவரிடம் வந்து பேசினார். ஆனால் வைஜயந்தி மாலா தன் முடிவிலிருந்து மாறவில்லை.

"ரஜினி இன்று இளைஞர்களின் மாபெரும் சக்தியாக விளங்கி வருகிறார். அவருடன் மோதுவது போன்ற கதாபாத்திரத்தில் நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன்," என்று சொல்லி விட்டார் வைஜயந்திமாலா.

இதனால் அந்த வாய்ப்பு முன்பு ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீவித்யாவுக்குப் போனது. மாமியாராக ஸ்ரீவித்யா ஒப்பந்தமானார்.

ஸ்ரீவித்யா சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். படமும் வெள்ளி விழா கண்டது. அந்தப் படம்தான் மாப்பிள்ளை.

English summary
Actress Vaijayanthi Mala has once rejected to acting with Rajini.
Please Wait while comments are loading...