»   »  த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்... அரண்மனை 2-ல் நாயகியானார்!

த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்... அரண்மனை 2-ல் நாயகியானார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவின் திருமணம் ரத்து என்று செய்திகள் பரவிய ஒரு வாரத்துக்குள் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை த்ரிஷா.

ஒன்று கமல் படம்... அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2.

த்ரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்தாகி விட்டதாக பேசப்பட்டு வந்தது.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

அதற்கேற்றார்போல், த்ரிஷா வரிசையாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. எனினும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. இப்போது அடுத்தடுத்து புதுப் படங்களை அவர் ஒப்புக் கொண்டு வருவதால், இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அரண்மனை 2

அரண்மனை 2

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா, அரண்மனை 2 படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

ட்விட்டரில்

ட்விட்டரில்

"இந்த சிறப்பான நாளில் முதல் முறையாக சுந்தர். சி இயக்கத்தில், சித்தார்த்துடன் இணைந்து அரண்மனை 2 படத்தில் நடிக்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்," என தனது ட்விட்டரில் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

கமல், சிம்பு

கமல், சிம்பு

கமல் ஹாஸன் நடிக்கும் ஆக்ஷன் படமான ஓர் இரவிலும், த்ரிஷாதான் நாயகி. அதே போல, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார்.

English summary
After the marriage cancellation news, Trisha is getting handful of new offers. She has signed two movies, ie, Oor Iravu with Kamal and Aranmanai 2 with Sidhardh.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil