»   »  பிரபாவின் அலையடிக்குமா?

பிரபாவின் அலையடிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அலையடிக்குதே படத்தில் சிந்து துலானிக்கு இணையாக கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் பிரபா ரெட்டி.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களில் பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த காளிமுத்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் அலையடிக்குதே.

இதில் அகில்குமார், நவீன் தனுஷ் ஆகிய புதுமுகங்கள் கதாநாயகர்களாக அறிமுகமாக இவர்களுக்கு ஜோடியாக சிந்து துலானி, பிரபாரெட்டி இருவரும் நடிக்கிறார்கள்.

கன்னட நடிகையான பிரபா ரெட்டி முதலில் ஆந்திராவில் கவர்ச்சியால் அலை பரப்பியவர். இப்போது தமிழில் கடை விரித்திருக்கிறார்.அலையடிக்குதே மூலம் அறிமுகமாகும் இவர் விளக்கு வச்சதும் ஆசை என்ற பாடல் காட்சியில் கவர்ச்சியிலேயே கபடிவிளையாடியிருக்கிறார்.

சுள்ளான் படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தாராளமாய் நடந்து கொண்ட சிந்து துலானி, மன்மதனில் ஒரு படி மேலே ஏறினார்.அந்தப் படத்திற்குப் பிறகு ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதை உதறிவிட்டு, அலையடிக்குதேபடத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

காரணம் இந்தப் படத்தில் எனக்கு மிக அருமையான கேரக்டர். அதனால் இதை ஒப்புக் கொண்டேன் என்கிறார்.

விசாரித்துப் பார்த்ததில், தனது தங்கை நேகா துலானிக்கும் ஒரு வாய்ப்பைத் தர முன் வந்ததால் தான் தெலுங்குக்கு நோ சொல்லிவிட்டுஅலையடிக்குதேவுக்கு ஓகே சொன்னார் சிந்து துலானி என்று தெரியவந்தது.

நேகாவும் சும்மா இல்லை. அவரும் தன் பங்குக்கு மிர்ச்சி பேபி மெஸ்மரிச கண்களடா என்ற பாடலுக்கு அக்காவுக்கும் பிரபா ரெட்டிக்கும்சேர்த்தே ஆப்பு வைக்கும் அளவுக்கு கவர்ச்சியால் கதகளியே ஆடியிருக்கிறார்.

படத்துக்கு பரணி இசையமைத்திருக்கிறார். பார்வை ஒன்றே போதுமே படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரியவெற்றியைப் பெறும் என்று அடித்துச் சொல்கிறார்.

அலையடிக்குதே படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. மச்சி மச்சி, ச்சீய் போடா என்ற 2 பாடல்களை லண்டன்,பிரான்சில் படமாக்கவிருக்கிறார்கள்.

படம் குறித்து தயாரிப்பாளர்கள் முகம்மது மற்றும் பாசில் கூறுகையில், இந்தப் படத்தின் கதை இதுவரை சினிமாவில் யாரும் தொடாத கதை.படம் பார்ப்பவர்களை நிச்சயம் அதிர்ச்சியடைய வைக்கும் பிரம்மாண்டத்துகாக கதை என்று இல்லாமல் கதைக்காக பிரம்மாண்டமாகபடத்தை எடுத்து வருகிறோம் என்றனர்.

இயக்குனர் காளிமுத்து பேசுகையில், அலையடிக்குதே கதையை தயாரிப்பாளர்களிடம் நான் சொன்னதும், உடனே படத்தைஆரம்பிக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். படத்திற்கு யார் யார் வேண்டும் என்று நான் கேட்டேனோ அவர்களை எல்லாம் ஒப்பந்தம்செய்து கொடுத்தார்கள்.

அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், படத்தை நன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். படம் வெளிவரும்போது நிச்சயம்எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறிகிறார்.

பிரபா ரெட்டியிடம் கேட்டால், படத்தில் பாருங்கள் நம்ம நடிப்பை(!) என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil