»   »  கூலிங் கிளாஸ் அணிந்த “தேவசேனா”... வித்தியாசமான போட்டோவை வெளியிட்ட ‘காதலன்’ பாகுபலி!

கூலிங் கிளாஸ் அணிந்த “தேவசேனா”... வித்தியாசமான போட்டோவை வெளியிட்ட ‘காதலன்’ பாகுபலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் சனிக்கிழமை தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் நடிகை அனுஷ்கா.

தமிழில் ரெண்டு படம் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. முதல்படம் சொல்லிக் கொள்கிற விதத்தில் அமையாவிட்டாலும், அருந்ததி படம் நல்ல அடையாளத்தை அவருக்குக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து லிங்கா, என்னை அறிந்தால், வேட்டைக்காரன், சிங்கம் என தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார் அவர்.

சமீபத்தில் வெளியான பாகுபலி படம் அனுஷ்காவின் புகழை மேலும் அதிகமாக்கியது. அதனைத் தொடர்ந்து ஆண் வேடம் ஏற்று துணிச்சலாக அனுஷ்கா நடித்திருந்த ருத்ரமாதேவி படம், அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மேலும் விருந்தாக அமைந்தது. அனுஷ்காவிற்கு கட்-அவுட் அமைத்து அபிஷேகம் பண்ணி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

பாகுபலி நாயகி...

பாகுபலி நாயகி...

யோகா டீச்சராக வாழ்க்கையைத் துவக்கிய அனுஷ்கா, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவின் காட்சிகள் குறைவு. எனவே, இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிறந்தநாள்...

பிறந்தநாள்...

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் அனுஷ்கா. அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்கள் வழியாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பிரபாஸ்...

பிரபாஸ்...

அந்தவகையில் பாகுபலி நாயகனான பிரபாஸ், பாகுபலி பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வித்தியாசமான புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, அனுஷ்காவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லியுள்ளார்.

தேவசேனா...

தேவசேனா...

பாகுபலி படத்தில் தேவசேனா என்ற ராணி வேடத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. முதல்பாகத்தில் அவர் சிறைபிடிக்கப் பட்டு இருப்பது போலவும், மகன் சிவ் வந்து அவரை மீட்டுச் செல்வதும் காட்சிகளாக சொல்லப்பட்டது.

கூலிங் கிளாஸ்...

கூலிங் கிளாஸ்...

அப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் இது உள்ளது. அழுக்கு உடை அணிந்து, கையில் விலங்கிட்ட நிலையில் அனுஷ்கா நிற்க, அவரின் உடைக்கு சற்றும் பொருந்தாத கூலிங் கிளாஸ் அவர் கண்களில் மாட்டப்பட்டுள்ளது. அருகிலேயே பிரபாஸ். அவரும் சேறு பூசிய உடலுடனேயே காணப்படுகிறார்.

இனிமையான பெண்...

இனிமையான பெண்...

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, 'நான் பார்த்ததிலேயே மிகவும் இனிமையான பெண்ணான அனுஷ்காவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என பிரபாஸ் குறிப்பிட்டுள்ளார்.

காதல்...?

காதல்...?

ஏற்கனவே, பாகுபலி படத்தின் ஷூட்டிங் போது அனுஷ்காவிற்கும், பிரபாஸுக்கும் காதல் மலர்ந்து விட்டதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
South Indian actress Anushka Shetty celebrates her 34th birthday on Saturday, 7 November. Her "Baahubali" co-star also shared an unseen photo of them from the sets of the magnum opus film, which is being shared by many of their fans on Twitter and Facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil