»   »  கோபிகா மீது காட்டத்தில் ப்ரணதி

கோபிகா மீது காட்டத்தில் ப்ரணதி

Subscribe to Oneindia Tamil

சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் இரண்டாவது ஜோடியாக நடித்த ப்ரணதிக்கு உடனடியாகவாய்ப்புக்கள் வராததில் வருத்தம் தான்.

மலையாள உலகின் அக் கால ஹீரோவான ஜோஸின் மகளான இவர், கேரளத்தில் சினிமாவில்அறிமுகமானாலும் தமிழ் மீதான பாசத்தால் (எல்லாம் டப்பு மேட்டர் தான்) கோடம்பாக்கத்துக்குவந்தவர்.

ஆனால், சரத்குமார் இவரை டம்மி ஹீரோயினாக பயன்படுத்தினார். படம் தோற்றதால் ப்ரணதியையாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பெங்களூருக்கு கப்பலேறினார்.

அங்கு இவர் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பலனாக இரண்டு படங்கள் புக் ஆகின.

அங்கிருந்தபடியே தமிழில் வேட்டையைத் தொடர்ந்த காரணத்தால் முதலில் துணிச்சல் என்றொருபடம் கிடைத்தது. ஆனால், அது பூஜையோடு நின்று போக மனம் நொந்தார் ப்ரணதி.

ஆனாலும், சளைக்காமல் முயன்று குரு தேவா என்ற புதிய படத்திலும் ஆர். சுந்தர்ராஜன் இயக்கப்போகும் உயிரெழுத்து என்னொரு படத்திலும் ஹீரோயின் ரோல்களை லவட்டி விட்டார்.

குரு தேவா படத்தில் ஹீரோ ஜெய் ஆகாஷ். இதில் கல்லூரி மாணவியாக கலக்கும் வேடமாம்.

பார்க்க முத்தினாற் போல இருந்தாலும் இவர் இன்னும் பிளஸ் டூ மாணவி தானாம். 10ம் வகுப்புபடிக்கும்போதே சினிமா ஆசை வந்து ராத்தூக்கத்தை கெடுக்க, மலையாள சினிமாவில் நடிக்கமுயன்றுள்ளார்.

ஆனால், வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந் நிலையில் கொச்சியில் நடந்த அழகிப் போட்டியில்மிஸ் கொச்சின் பட்டத்தை ப்ரணதி வென்றுவிட, தொடர்ந்து லோக்கலில் மாடலிங் செய்ய வாய்ப்புகிடைத்தது.

இதையடுத்து கொச்சியிலேயே ஜரிகை சேலைகளுக்கு மாடலிங் செய்துள்ளார்.

அப்போது மலையாள சினிமாக்காரக்களின் பார்வை இவர் மீது பட, பார் த பியூப்பிள் என்றபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் ரூ. 4 கோடி வசூல் செய்து மலையாளதிரையுலகையே திகைக்க வைக்க, இதனால் அடுத்தடுத்து படங்கள் குவியும் என்று காத்திருந்தார்ப்ரணதி.

ஆனால், அது தான் நடக்கவில்லை. இதனால் தமிழ் மீது திடீர் பாசத்தை தானாகவே வரவழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் வந்து தொபுக்கடீர் என்று குதித்தார்.

இப்போது லேட்டாக பிக் அப் ஆகி கையில் 2 படங்களுடன் இருக்கும் ப்ரணதிக்கு ஒரு பெரியவருத்தம்.

மலையாளத்தில் இவர் நடித்த பார் தி பீயூப்பிள் இப்போது தமிழுக்கு டப் ஆகிறது. 4 த ஸ்டூடண்ட்ஸ் என்றபெயரில் தமிழில் வெளியாகும் இந்தப் படத்தின் நாயகியான ப்ரணதியை பிரதானப்படுத்தாமல் அதில் ஒருபாட்டுக்கு ஆட்டம் போட்ட கோபிகாவை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம் கோடம்பாக்கத்தினர்.

காரணம், ஆட்டோகிராப் மூலம் உச்சிக்குப் போய்விட்ட கோபிகாவை வைத்து படத்தை விட நம்மவர்கள்போட்டுள்ள மார்க்கெட்டிங் பிளான் தான்.

மலையாளத்திலும் இப்படித்தான் ப்ரணதியை கோபிகா ஓவர்டேக் செய்தாராம். பார் த பீயூப்பிள் படத்தில் வரும்லஜ்ஜாவதியே.... என்ற பாடலுக்கு ஹீரோ பரத்துடன் கோபிகா போட்ட ஆட்டம் தான் படத்தின் வெற்றிக்குமுக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இதனால் அவரையே முக்கியப்படுத்தி விளம்பரம் செய்தார்கள் பார் த பியூப்பிளை தயாரித்த சேட்டன்கள்.ஹீரோயினான ப்ரணதியை கண்டுகொள்ளவே இல்லை.

சரி பரவாயில்லை, தமிழில் டப் செய்யப்படும் போதாவது தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று நினைத்திருந்தப்ரணதியின் கனவிலும் மண் விழுந்து விட்டது.

இதனால் கோபிகா மீது படு காட்டத்தில் இருக்கிறாராம் ப்ரணதி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil