»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கம்பீரம் படம் தோல்விடைந்தாலும் அதில் நடித்த ப்ரணதிக்கு வாய்ப்புக்களுக்கு குறைவில்லை.

துணிச்சல், 4 ஸ்டூடன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இவருக்கு மலையாளத்திலும் சான்ஸ்கள் குவிகின்றன.

கம்பீரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார் ப்ரணதி. படம் சுமாராகப் போனாலும், ப்ரணதியின்நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. நம்ம பக்கம் காத்து வீசும்போதே நாலு காசுபார்த்துவிடலாம் என்ற எண்ணம் ப்ரணதிக்கு இல்லை.

நல்ல கதை, சிறந்த இயக்குனர், பெரிய பேனர் என்றால்தான் நடிப்பேன் என்கிறார். அப்படி பார்த்து பார்த்துசெலக்ட் செய்த படம்தான் துணிச்சல். இந்தப் படத்தில் அருண்குமார்தான் ஹீரோ. பிரபல வினியோகஸ்தரானகாளிதாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் லண்டனில்இசை பயிற்சி எடுத்திருக்கிறார். விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்த மாதம் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். தொடர்ந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி,டெல்லி, குலுமனாலி ஆகிய இடங்களில் படம் பிடிக்கிறார்கள். பாடல்காட்சிகளுக்கு வழக்கம்போல் வெளிநாடுபோகிறார்கள்.

துணிச்சல் படம் தவிர, 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்திலும் ப்ரணதி நடித்து வருகிறார். பார் தி பீப்பிள் என்றமலையாளத்தில் சக்கை போடு போட்ட படத்தைத்தான் 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற பெயரில் தமிழில் எடுக்கிறார்கள்.இதில் ப்ரணதியோடு, பாய்ஸ் பரத், கோபிகா, தாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை தமிழுக்கு ஒன்றும் புதுசில்லை. ரமணா படத்தையும், இந்தியன் படத்தையும் மிக்சியில்போட்டு அரைத்தால் இந்தப் படத்தின் கதை கிடைக்கும். மலையாளத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட்.அதுவுமில்லாமல் கோபிகா என்ற அழகு தேவதை இருப்பதால் தைரியமாக தமிழில் எடுக்கலாம் என்று எடுத்துவருகிறார்கள்.

இந்தப் படம் ஜூன் மாதம் தமிழுக்கு வருகிறது.

இந்த இரு படங்களில் புக் ஆகியிருக்கும் ப்ரணதிக்கு சொந்த ஊரான கேரளத்திலும் வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழில் நடித்துக் கொண்டே மலையாளத்திலும் தலையைக் காட்டிவிட்டு வந்து கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil