»   »  பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா

பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் பிரணிதா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எனக்கு வாய்த்த அடிமைகள். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பலரிடம கேட்டும் மறுத்துள்ளார்கள்.

Pranitha does shady character in Enakku Vaaitha Adimaigal

அதன் பிறகே பிரணிதாவிடம் கேட்க அவரோ, இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தான் எதிர்பார்த்தேன் என கூறி நடித்துள்ளார். அப்படி என்ன கதாபாத்திரம் என்று நினைக்கிறீர்களா?

நாயகன் ஜெய்யை காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்ய வேண்டுமாம். பார்க்க அப்பாவி போன்று இருக்கும் பிரணிதா ஜெய்யிடம் வில்லத்தனம் செய்துள்ளார்.

சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திலும் பிரணிதா நடித்து வருகிறார்.

English summary
Pranitha has done a shady character in Jai's upcoming movie Enakku Vaaitha Adimaigal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil