»   »  சைட் பிசினஸில் கொடிகெட்டிப் பறக்கும் கார்த்தி ஹீரோயின்

சைட் பிசினஸில் கொடிகெட்டிப் பறக்கும் கார்த்தி ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: நடிகை பிரணிதா பெங்களூரில் துவங்கிய பப் வெற்றிகரமாக செயல்படுவதை உணவகம் ஒன்றை துவங்குகிறார்.

உதயன் படம் மூலம் கோலிவுட் வந்த பிரணிதா கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலமானார். கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காணாமல் போனார்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த சேட்டைகளால் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாக கூறப்பட்டது.

பிரணிதா

பிரணிதா

ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை.

பப்

பப்

பிரணிதா தனது நண்பர்களுடன் சேர்ந்து பூட்லெக்கர் என்ற பப் ஒன்றை கடந்த 2015ம் ஆண்டு துவங்கினார். பெங்களூரில் துவங்கப்பட்ட இந்த பப் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உணவகம்

உணவகம்

பூட்லெக்கர் தவிர்த்து பெங்களூரில் ஷான் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளார் பிரணிதா. புதிய உணவகத்தை இரண்டு மாதங்களில் துவங்க உள்ளார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

உணவக வியாபாரத்தை ஹைதராபாத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது என்கிறார் பிரணிதா. தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

English summary
Actress Pranitha has planned to open a restaurant in Bengaluru in a couple of months. She has already invested in a pub named Bootlegger.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil