Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, பிரேசிலை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா.. கடும் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படியா பண்ணுவாங்க? அவங்க லெவலுக்குலாம் நான் கீழ இறங்க விரும்பலை... 'பிசாசு' ஹீரோயின் விர்ர்ர்
சென்னை: அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு ஒருவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிப்பது மோசமானது என்று நடிகை பிரயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.
தமிழில், மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். இந்தப் படத்துக்குப் பிறகு சில படங்களுக்கு அவர் பேசப்பட்டார். ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மலையாளத்தில் மோகன்லாலில் சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட், உஸ்தாத் ஓட்டல், ஒரு முறை வந்து பார்த்தாயா, ராம்லீலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கடுமையானவை
கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் சினிமாவையும் நடிகர், நடிகைகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தப் போக்கு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், டிசாஸ்டர் என்றும் குப்பை என்றும் கூறிவருகின்றனர். 'விமர்சனங்களை ஏற்கிறோம், ஆனால் இதுபோன்ற வார்த்தைகள் கடுமையானவை' என்று நடிகர், நடிகைகள் கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
இருந்தும் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகர், நடிகைகளும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். ஏதாவது சின்ன காரணம் கிடைத்தாலும் அதை வைத்து, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது அதிகரித்து வருகிறது. இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

டிசாஸ்டர்
இந்நிலையில் இதில் 'பிசாசு' நடிகை பிரயாகாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, டிசாஸ்டர் என்ற வார்த்தையை வெறுக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, 'குறிப்பாக என்னை பற்றிய டிரோல்களில் பலர் இந்த வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பலர் எதிர்மறையான கருத்துக்களை மற்றவர்கள் மீது வைக்கின்றனர்.

பாதிக்கப்பட்டிருக்கிறேன்
இதுபோன்று அவமானப்படுத்தும் விதமாக யாரையும் நாம் பேசுவதில்லை. அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு ஒருவரை இப்படி கடுமையாக விமர்சிப்பது மோசமானது. தனிப்பட்ட முறையில் நானும் ட்ரோல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை கடுமையாக விமர்சிப்பவர்களின் தரத்துக்கு நானும் இறங்க விரும்பவில்லை என்பதால் ட்ரோல்களை நான் புறக்கணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கன்னடத்திலும்
இவர் இப்போது நடித்துள்ள பூமியிலே மனோஹரா ஸ்வகர்யம் என்ற மலையாளப் படம் அடுத்து வெளிவர இருக்கிறது. சைஜூ அந்திக்காடு இயக்கியுள்ள இதில் தீபக் பரம்போல் ஹீரோவாக நடித்துள்ளார். மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும் பிரயாகா, சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழிலும் நடிக்க இருக்கிறார்.