»   »  டைட் பாதுகாப்பில் ப்ரீத்தி!

டைட் பாதுகாப்பில் ப்ரீத்தி!

Subscribe to Oneindia Tamil

பெற்றோரிடமிருந்து புதிதாக பிரச்சினை எதுவும் வந்து விடாமல் இருப்பதற்காக ஸ்டண்ட் மாஸ்டரின் துணையுடன்தான் வெளியில் நடமாடுகிறாராம் ப்ரீத்தி வர்மா.

ப்ரீத்தி ஓடிப் போய் திரும்பி வந்து 2 மாதங்களாகி விட்டது. தெலுங்குப் பட ஷூட்டிங்குக்காக ராஜமுந்திரிக்குப் போனவர், கூட வந்த அம்மாவுக்கு அல்வாவும், ஜாங்கிரியும் கொடுத்து விட்டு மும்பைக்கு எஸ்கேப் ஆகி விட்டார்.

எங்கே போனா என் மக என்று புலம்பித் தவித்த ப்ரீத்தியின் அம்மா சென்னைக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தார். பிறகு புதுப் புதுக் கதைகள் வந்து, ப்ரீத்தி குறித்து புதுப் புது அர்த்தங்களைக் கொடுத்தது.

எல்லாக் குழப்பத்திற்கும் தீர்வாக, சென்னைக்குத் திரும்பிய கோர்ட்டில் சரணடைந்தார். போலீஸ் பாதுகாப்பையும் பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ப்ரீத்தியின் அப்பா பிளஸ் அம்மா மீது வழக்கு தொடர்ந்தனர் போலீஸார். இதையடுத்து அவர்கள் இருவரும் இப்போது எஸ்கேப் ஆகி தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இப்போது போலீஸ் பாதுகாப்பில் ப்ரீத்தி இருந்தாலும் கூட அசவுகரியமான வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறாராம். முன்பு போல சுதந்திரமாக இருக்க முடியவில்லையாம். தனது அப்பா, அம்மாவால் பிரச்சினை வரலாம் என அஞ்சுகிறாராம்.

எனவே அவருக்கு பக்காவான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கு போனாலும் கூடவே 6 பேர் பாதுகாப்புக்காக உடன் செல்கிறார்களாம். இந்தப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர் ஸ்டண்ட் மாஸ்டர் லாம்பர்ட்.

ப்ரீத்தியை யாரும் அண்ட விடாமல் படு அணைப்பாக கவனித்துக் கொள்கிறார்களாம் லாம்பர்ட் அண்ட் கோவினர். இதனால் சில நேரங்களில் ப்ரீத்திக்கே சங்கடங்கள் ஏற்பட்டு சிக்கலாகிப் போகிறதாம்.

விட்டால், இந்தப் பாதுகாப்புக் குழுவினரிடமிருந்து ப்ரீத்தியைக் காக்க இன்னொரு பந்தோபஸ்து கோஷ்டி வேண்டும் போலிருக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil