Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கவிதையாய் மலர்ந்த தேவதை... போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்ட பிரீத்தி
சென்னை : சித்தி 2வின் கனவு தேவதையாக வலம்வருபவர் பிரீத்தி ஷர்மா.
இவரது இயல்பான நடிப்பால் சித்தி 2 சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறியுள்ளது.
அரண்மனை
3
படத்திலிருந்து
4வது
சிங்கிள்
ரெடி...
ரிலீஸ்
தேதி
இதோ!
இந்நிலையில் இவர் தற்போது போட்டோஷுட் ஒன்றை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சித்தி 2 -பிரீத்தி ஷர்மா
சித்தி சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்று சிறந்த சீரியல் என்ற பெயரை பெற்ற நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது சித்தி 2 சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் தோன்றி தன்னுடைய குழந்தைதனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர் பிரீத்தி ஷர்மா.

மிகச்சிறந்த வரவேற்பு
ராதிகா மற்றும் நந்தன் ஆகியோர் சிறப்பான கேரக்டர்களில் வந்தாலும் பிரீத்தியின் வெண்பா கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காதல், சோகம், வருத்தம் உள்ளிட்டவற்றை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார் பிரீத்தி.

உறவுகளுக்கு முக்கியத்துவம்
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய வாழ்க்கையையே விட்டுக் கொடுக்க துணியும் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தார் பிரீத்தி. சாரதா வளர்ப்புத் தாய் என்று தெரிந்ததும் தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்துவதிலாகட்டும் எதற்காகவும் தன்னுடைய குடும்பத்தை விட்டுக் கொடுக்காத குணத்தை காட்டுவதிலாகட்டும் வெண்பா கேரக்டர் மிளிர்ந்து காணப்படுகிறது.

புதிய போட்டோஷுட்
இந்நிலையில் வெண்பா கேரக்டரில் நடித்துவரும் பிரீத்தி ஷர்மா தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்து முடித்துள்ளார். புடவையில் கலக்கலான போட்டோஷுட்டாக அது அமைந்துள்ளது. ரசிகர்களின் கனவு தேவதையாக வலம்வரும் பிரீத்தி இந்த போட்டோஷுட்டில் அதை அப்படியே பிரதிபலிக்கிறார்.

மயக்கும் சேலையில் பிரீத்தி
பிங்க் நிற சேலையில் அதற்கு மேட்சிங்காக பிளவுஸ் அணிந்து அந்த போட்டோஷுட்டில் காணப்படுகிறார் பிரீத்தி. எந்தவிதமான நகைகளும் இல்லாமல் எளிமையாக காணப்பட்டாலும் கண்களாலேயே கதை சொல்கிறார். ரசிகர்களும் கிறக்கத்துடன் அதை கேட்டுக் கொள்கின்றனர். பிங்க் நிற புடவை அவருக்கு மிகவும் பொருத்தமாகவே காணப்படுகிறது.

சேலை கட்டும் பெண்
சாதாரணமாகவே பிரீத்தி காணப்படுவதாக தோன்றினாலும் மயக்குகிறார். சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு என்பதை இந்த புகைப்படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். மேலும் விலைமதிப்பில்லா புன்னகையையும் ரசிகர்களுக்கு பரிசாக தந்துள்ளார் பிரீத்தி. மொத்தத்தில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இந்த புகைப்படங்கள். விரைவில் வாணி போஜன் போன்றோர் வரிசையில் பிரீத்தி வெள்ளித்திரையிலும் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.