»   »  ப்ரீத்தி... ப்ரீத்தி...

ப்ரீத்தி... ப்ரீத்தி...

Subscribe to Oneindia Tamil


ப்ரீத்தி ரங்கயாணி. தமிழுக்கு புதுசு. சொந்த ஊர் மும்பை. இவர் வந்தவேகமும் தெரியவில்லை, நடிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை அதற்குள் கையில்இரண்டு சான்ஸ்களை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தைக் கலக்கி வருகிறார்.

காதல் அரங்கம் (முதலில் காதல் சிற்பம்) என்ற படத்துக்காகத் தான் இவரை கூட்டி வந்தார்கள். இதில் ஜோ என்ற புதுமுகத்துடன் சேர்ந்துநடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் பூம்புகார், சென்னை, காஞ்சி பகுதியில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

படத்தை இயக்குவது நேசம் முரளி என்ற புதுமுக இயக்குனர்.

இதில் கவலையில்லாமல் கவர்ச்சி காட்டி நடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரீத்தி. அத்தோடு நேரம்கிடைக்கும்போதெல்லாம் கோடம்பாக்கத்து கம்பெனிகளில் ஏறி இறங்குகிறார். அது உப்புமா கம்பெனியாகஇருந்தாலும் சரி.

அப்படி இவர் ஏறி, இறங்கி தயாரிப்பாளர்களை வளைத்துவிட்டு வந்ததற்கு ரிசல்டும் கிடைத்து வருகிறது. முதல்படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்திலும் புக் ஆகிவிட்டார்.

கொஞ்சம்ஹாட் ஆன படம் என்று சொல்லி தான் இரண்டாவது படத்தில் இவரை புக் செய்திருக்கிறார்கள்.படத்தின் பெயர் பருவமே. ஹீரோ இன்னும் முடிவாகவில்லையாம். இது தவிர இன்னொரு படமும் கைக்குள்விழுந்துவிடும் நிலையில் இருக்கிறார் ப்ரீத்தி.

வழக்கமான மும்பை வரவுகளைப் போல இவருக்கும் தமிழ் தெரியாது என்பது இவரது பிளஸ் பாயிண்ட்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil