Don't Miss!
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Lifestyle
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா!
மும்பை : பிரபல பாலிவுட் நடிகையும் கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா பிகினியில் நீச்சல் குளத்தில் நின்றவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தி திரைப்பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையில் இருக்கும் அனுஷ்கா சர்மா பரி மற்றும் பல்புள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் கோலி சில தினங்களுக்கு முன்பு தான் அப்பாவாக உள்ளார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், அனுஷ்கா வாயும் வயிறுமாக நீச்சல்குளத்தில் நின்றவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் இப்பொழுது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தோழிக்கு
முத்தம்
கொடுக்கும்
நஸ்ரியா..வைரலாகும்
புகைப்படம்
!

வெற்றித் திரைப்படங்களில்
தனது சிறந்த நடிப்பின் மூலம் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டு வரும் அனுஷ்கா சர்மா பீகே, சுல்தான், பாம்பே வெல்வெட் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தயாரித்து வருகிறார்
இந்தியில் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் முன்னேறி வரும் அனுஷ்கா சர்மா இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் உள்ளார். இந்த நிலையில் நடிப்பில் கலக்கி வரும் அனுஷ்கா அதே சமயத்தில் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

சிறந்த தயாரிப்பாளராக
பரி மற்றும் பல்புள் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் தயாரிப்பில் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் சிறந்த தயாரிப்பாளராகவும் இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காட்டுத் தீ போல பரவி
கிரிக்கெட் வீரர் கோலி சமீபத்தில் தான் அப்பாவாக போகிறேன் என மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்த நிலையில் இந்த செய்தி காட்டுத் தீ போல பரவி பல்வேறு ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

தேவதையே
அதைத்தொடர்ந்து அனுஷ்கா சர்மா வாயும் வயிறுமாக இருக்கும் பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இறங்கி நின்றவாறு தான் விரைவில் அம்மாவாக போகிறார் என்ற மகிழ்ச்சியை முகத்தில் பெரும் சிரிப்பை வெளிப்படுத்தியவாறு வெளியிட்டுள்ள இந்த அழகான புகைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகை சமந்தா தேவதையே என பாராட்டியுள்ளார்.