»   »  நீண்ட நாள் காதலரை மணந்து திருமதி ஆனார் பிரீத்தி ஜிந்தா!

நீண்ட நாள் காதலரை மணந்து திருமதி ஆனார் பிரீத்தி ஜிந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா நேற்று அமேரிக்காவில் தனது காதலரை எளிமையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் தனது நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் வெளியான உயிரே படத்திலும் இவர் நடித்திருந்தார்.மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் பங்குதாரராகவும் பிரீத்தி ஜிந்தா திகழ்கிறார்.

Preity Jinta Enters Wedlock

41 வயதான பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை, நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரீத்தி ஜிந்தா- ஜீன் குட்டினெப் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. எளிமையாக திருமணம் புரிந்து கொண்டாலும் பிரீத்தி ஜிந்தாவின் திருமண வரவேற்பை மிகவும் ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு நடைபெறப்போகும் இந்த வரவேற்புக்கு, பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்க பிரீத்தி முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 2014ம் ஆண்டிற்குப் பின் பிரீத்தி ஜிந்தா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Preity Zinta - Gene Goodenough Marriage Held on Yesterday in Los Angeles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil