»   »  திருமண போட்டோக்களை ஏலத்தில் விடும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா: எதற்கு தெரியுமா?

திருமண போட்டோக்களை ஏலத்தில் விடும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா: எதற்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏலத்தில் விட உள்ளாராம்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்இனப் என்பவரை காதலிப்பதாகவும், இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ப்ரீத்திக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது.

எனக்கு ஒன்றும் தற்போது திருமணம் இல்லை, அதை நான் முடிவு செய்து கொள்கிறேன் என்று சீறினார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ப்ரித்தி தனது காதலர் ஜீனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் குடும்பத்தார், மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

புகைப்படம்

புகைப்படம்

ப்ரீத்தியின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. திருமணப் பந்தல் புகைப்படம் மட்டுமே வெளியானது.

ஏலம்

ஏலம்

ப்ரீத்தி தனது திருமண புகைப்படங்களை ஏலத்தில் விட உள்ளாராம். ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ப்ரீத்தி ஜிந்தா பவுன்டேஷன் மூலம் நல்ல காரியத்திற்காக செலவு செய்ய உள்ளாராம்.

அம்மா

அம்மா

ப்ரீத்திக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அவர் உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று அவரது அம்மா அடம்பிடித்துள்ளார். அம்மாவுக்காகவே ப்ரீத்தி திருமணம் செய்துள்ளாராம்.

English summary
Bollywood actress Preity Zinta has reportedly decided to auction her wedding pictures for a good cause.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil