»   »  இப்போ ஒரு நல்ல மனிதரை காதலிக்கிறேன், ஹேப்பியா இருக்கேன்: ப்ரீத்தி ஜிந்தா

இப்போ ஒரு நல்ல மனிதரை காதலிக்கிறேன், ஹேப்பியா இருக்கேன்: ப்ரீத்தி ஜிந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொழில் அதிபர் நெஸ் வாடியாவை பிரிந்த பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் மார்க்கெட் முழுவதுமாக படுத்துவிட்டது. இதையடுத்து அவர் தானே தயாரித்து நடித்த படமும் ஊத்திக் கொண்டது. தொழில் அதிபர் நெஸ் வாடியாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார் ப்ரீத்தி.

இந்நிலையில் நெஸ் மீது மும்பை போலீசில் கடந்த ஆண்டு மே மாதம் புகார் அளித்தார்.

ஐபிஎல்

ஐபிஎல்

நெஸ் வாடியாவும், ப்ரீத்தியும் சேர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியை வாங்கினர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது நெஸ் தன்னை தரக்குறைவாத நடத்தியதாகவும், தனியாக இருக்கையில் சிகரெட்டால் சுட்டும், அடித்தும் கொடுமைப்படுத்தியதாகவும் ப்ரீத்தி போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் ப்ரீத்தி கூறுவது பொய் என்று நெஸ் தெரிவித்தார்.

பஞ்சாப்

பஞ்சாப்

2005ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்த நெஸ் வாடியாவும், ப்ரீத்தியும் 2009ம் ஆண்டு பிரிந்தனர். முன்னதாக 2008ம் ஆண்டில் அவர்கள் வாங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணியை அவர்கள் இருவரும் சேர்ந்து தான் தற்போதும் நிர்வகித்து வருகிறார்கள்.

காதல்

காதல்

நெஸ் வாடியாவுடனான அனைத்தும் முடிந்துவிட்டது. நான் தற்போது நல்ல மனிதர் ஒருவரை காதலித்து வருகிறேன். அவருடன் நேரம் செலவிட்டு வருகிறேன். விரைவில் அவர் யார் என்பதை தெரிவிப்பேன் என்கிறார் ப்ரீத்தி.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் காதலிக்கும் நபர் என்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துள்ளார். கெட்டவைகளிடம் இருந்து தள்ளியே உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் ப்ரீத்தி. ப்ரீத்தி காதலிப்பவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவராம்.

வாடியா

வாடியா

நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்த வேலையை பார்ப்பது தான் நல்லது என்று கூறியுள்ளார் ப்ரீத்தி. ஆனால் நெஸ் வாடியா மன்னிப்பு கேட்டாரா, அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே செட்டில் செய்யப்பட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

English summary
Bollywood actress Preity Zinta who got separated from her businessman lover Ness Wadia is in love with a man from Los Angeles
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil