»   »  என்னது ஜனவரி மாசம் எனக்குக் கல்யாணமா?... ஷாக்கான ப்ரீத்தி ஜிந்தா

என்னது ஜனவரி மாசம் எனக்குக் கல்யாணமா?... ஷாக்கான ப்ரீத்தி ஜிந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜனவரி மாதம் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான நடிகை ப்ரீத்தி ஜிந்தா 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வெளிநாட்டுக் காதலரை மணம் புரியவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவ்வாறு வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

Preity Zinta Marriage in January?

"எனக்குத் திருமணம் என்று எழுகின்ற வதந்திகளில் துளியும் உண்மையில்லை, மேலும் நான் 2016 ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளப்போவதுமில்லை.

நான் எப்போது திருமணம் செய்து கொண்டாலும் உங்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டுதான் செய்வேன்" என்று ப்ரீத்தி ஜிந்தா கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மற்றொருபுறம் ப்ரீத்தியின் காதலர் ஜெனீ ஒரு நல்ல நண்பராகத் தான் ப்ரீத்தி ஜிந்தாவிடம் பழகுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

ப்ரீத்தி ஜிந்தாவிற்கு தற்போது 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood Actress Preity Zinta Wrote on Twitter "Also It's getting a bit wierd telling people that I'm not getting Married in January. I PROMISE I will TELL U ALL AS & WHEN I DO !!! Ting".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil