»   »  மீண்டும் பாலிவுட் பக்கம் செல்லும் ப்ரியா ஆனந்த்!

மீண்டும் பாலிவுட் பக்கம் செல்லும் ப்ரியா ஆனந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் வாமனன் படம் மூலம் தான் அறிமுகமானார் ப்ரியா ஆனந்த். அமெரிக்க ரிட்டர்னாக இருந்தாலும் பூர்வீகமாக தமிழ் நாட்டை சேர்ந்த ப்ரியா ஆன்ந்துக்கு ஆரம்பத்தில் தமிழ் கைகொடுக்கவில்லை. எனவே இந்தி பக்கம் சென்று இங்லீஷ் விங்லீஷ் உட்பட நான்கு இந்தி படங்களில் நடித்தார்.

பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக எதிர் நீச்சலில் நடித்தார். அந்த படம் தந்த வெற்றியால் ப்ரியாவுக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. வாய்ப்புகளோடு சேர்ந்து கவுதம் கார்த்தி, அதர்வா என்று கிசுகிசுக்களும் வரத் தொடங்கின. அதோடு காணாமலும் போய்விட்டார்.

Priya Anand again goes to Bollywood

இப்போது கவுதம் கார்த்திக்கோடு முத்துராமலிங்கம் படத்தில் நடித்துவருகிறார். அந்த படம் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் தள்ளிப்போய் கொண்டே இருக்க இனி தமிழே வேலைக்கு ஆகாது என்று மீண்டும் இந்தி பக்கம் செல்ல முடிவெடுத்துள்ளார்.

ஒரு இந்தி படத்துக்காக மூன்று மாதங்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார். 'அந்த பட ஷூட்டிங்குக்கு முன்னாடியே உங்க படத்தை முடிச்சுடுங்க... இல்லனா மூணு மாசத்துக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க...' என்று சொல்லிவிட்டாராம் முத்துராமலிங்கம் படக்குழுவினரிடம்.

சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கிக் கொடுத்த கவுதம் நிலைதான் பாவம்!

English summary
After Muthuramalingam movie, Priya Anand is planning to act in Bollywood movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos