»   »  பீர் பிரச்சனை: நயன்தாராவுக்காக வாய்ஸ் கொடுக்கும் ப்ரியா ஆனந்த்

பீர் பிரச்சனை: நயன்தாராவுக்காக வாய்ஸ் கொடுக்கும் ப்ரியா ஆனந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா பீர் வாங்கும் காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நயன்தாராவுக்கு ஆதரவாக நடிகை ப்ரியா ஆனந்த் குரல் கொடுத்துள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்குவது போன்ற காட்சி உள்ளது. இது குறித்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த காட்சிக்கு இந்து மக்கள் கட்சி மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நயன்தாராவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

நயன்தாரா

நயன்தாரா

தனது கொடும்பாவி எரிக்கப்பட்டதும் நயன்தாரா சற்று கலங்கிவிட்டார். படத்தில் இயக்குனர் கூறியபடி தான் நடித்தேன். நானாக எதுவும் செய்யவில்லை என்று நயன்தாரா விளக்கம் அளித்தார்.

டாஸ்மாக்

டாஸ்மாக்

இனி டாஸ்மாக் கடை காட்சிகளில் தயவுசெய்து என்னை நடிக்க வைக்காதீர்கள் என்று நயன்தாரா இயக்குனர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ப்ரியா ஆனந்த்

ப்ரியா ஆனந்த்

படத்தில் வரும் ஒரு காட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது. நடிகர், நடிகைகள் யாரும் காட்சியை முடிவு செய்வது இல்லை. இயக்குனர் சொல்வதை செய்கிறோம். இந்த காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது இயக்குனருக்கு தான் தெரியும். படம் ரிலீஸான பிறகு விமர்சிப்பது தான் முறை என்று ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

படத்திற்கு அந்த டாஸ்மாக் கட்சி தேவையாக இருந்தது. அதனால் தான் அந்த காட்சியை படமாக்கினேன். படம் பார்க்கும்போது உங்களுக்கே அதன் முக்கியத்துவம் தெரிய வரும். இதற்காக நயன்தாராவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையில்லாதது என்று நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

English summary
Priya Anand told that it is not fair to protest against Nayanthara for acting in a TASMAC scene as she did what director asked her to do.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil