»   »  கவுதம் கார்த்திக்கின் முத்துராமலிங்கத்தில் பள்ளி மாணவியாக மாறிய 'கீதா மிஸ்'

கவுதம் கார்த்திக்கின் முத்துராமலிங்கத்தில் பள்ளி மாணவியாக மாறிய 'கீதா மிஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் கார்த்திக்கின் முத்துராமலிங்கம் படத்தில் நடிகை பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார்.

கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், பிரபு, கார்த்திக், நெப்போலியன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் முத்துராமலிங்கம். ராஜதுரை இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Priya Anand Play a School Student

பணப்பிரச்சினை காரணமாக நின்றுபோன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரியா ஆனந்த் இப்படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சீருடையில் பிரியா ஆனந்த் பள்ளி மாணவிகளுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இத்தகவலை உறுதி செய்துள்ளன.

இப்படத்தில் இடம்பெறும் தெற்கு தேச சிங்கமடா பாடலை கமல்ஹாசன் பாடியிருக்கிறார். முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதுகிறார்.

எதிர் நீச்சல் படத்தில் கீதா மிஸ்ஸாக அசத்திய பிரியா ஆனந்த், முத்துராமலிங்கம் படத்தில் பள்ளி மாணவியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Priya Anand Play a School Student in Gautham Karthik's Muthuramalingam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil