உள்ளாடை சைஸ் பற்றி கேட்ட நெட்டிசன்... நச்சுன்னு பதில் கொடுத்த பிரியா பவானிசங்கர்

சென்னை : உள்ளாடை சைஸ் என்ன என்று கேட்ட நெட்டிசனுக்கு சரியாக நோஸ்கட் அளிக்கும் வகையில் நச்சுன்னு பதிலளித்துள்ளார் நடிகை பிரியா பவானிசங்கர். நடிகைகளுக்கு இது போன்று கேள்வி சமீப காலமாக அதிகரித்து வருவதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் நடிகைகள் பலரும் தங்களின் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவதும், அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில் தருவதும், அப்படி கூறப்படும் பதில்கள் டிரெண்டிங் ஆவதும் வழக்கமாகி வருகிறது. சிலர் அருவருக்க தக்க வகையில் நடிகைகளிடம் கேள்வி கேட்பதும் வழக்கமாகி வருகிறது.

ஒரே சமயத்தில் இத்தனை படங்களா

ஒரே சமயத்தில் இத்தனை படங்களா

டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்து, சின்னத்திரையில் நடிகையாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர் பிரியா பவானிசங்கர். மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடைசியாக ஓ மணப்பெண்ணே படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றலம்பலம், அகிலன், இந்தியன் 2 என பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானிசங்கரின் நெத்தியடி பதில்

பிரியா பவானிசங்கரின் நெத்தியடி பதில்

இவர் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களின் உள்ளாடை சைஸ் என கேட்டுள்ளார். இது போன்ற கேள்விகளை எப்படி கையாள்வது என நன்றாக தெரிந்து வைத்துள்ள பிரியா பவானிசங்கர், நான் 34 டி ப்ரோ. மார்பகங்கள் என்பது நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. அது உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் உள்ளது தான் என பதிலடி கொடுத்துள்ளார்.

யாரையும் திருத்த முடியாது

யாரையும் திருத்த முடியாது

இதே போல் மற்றொரு ரசிகர், நீங்கள் பெரிய ராஜதந்திரி ஆகி விட்டீர்கள் போலவே என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிரியா, ராஜதந்திரியா. எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. இணையத்தில் பக்கம் பக்கமாக கருத்து போடுவதால் நாம் யாரை திருத்தி விட முடியாது. அவர்களின் மனங்களில் உள்ள அழுக்கை கூட மாற்றி விட முடியாது. நான் பதிலளிப்பதால் மட்டும் யாரும் மாறி விட போவதில்லை. ஆனால் சர்ச்சையை கிளப்பி தேவையில்லாத நாடகத்தை போட முடியும் என கூறி உள்ளார்.

செம துணிச்சல் தான்

செம துணிச்சல் தான்

பிரியா பவானிசங்கரின் இந்த பதில் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. பிரியாவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தனது உள்ளாடை சைஸ் என்ன என்பதையும் அவர் தைரியமாக வெளியிட்டுள்ளதுடன், இது போன்ற கேள்விகளுக்கும் முடிவு கட்டியதற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X