»   »  மூச்சுக்கு மூச்சு காதலரை பற்றி ட்வீட் செய்யும் பிரியாமணி: விரைவில் டும் டும் டும்?

மூச்சுக்கு மூச்சு காதலரை பற்றி ட்வீட் செய்யும் பிரியாமணி: விரைவில் டும் டும் டும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பிரியாமணி திடீர் என தனது காதலன் பற்றி அதிகம் ட்வீட் செய்து வருகிறார்.

கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை பிரியாமணி மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதலித்து வருகிறார். நீங்கள் முஸ்தபாவை காதலிக்கிறீர்களா என்று கேட்டால் பிரியாமணி அமைதியாகிவிடுவார்.

இந்நிலையில் அவர் முஸ்தபா பற்றி அண்மையில் அதிகமாக ட்வீட் செய்து வருகிறார். பிரியாமணி மலையாள நடிகர்கள், நடிகைகளுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். பிரியாவுடன் அவரது காதலரும் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் முஸ்தபாவுடன் நேரத்தை செலவிட்ட பிரியாமணி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பொம்மை

எனக்கு ஹஸ்கி வாங்கி கொடுத்துள்ளார். நன்றி முஸ்தபா ராஜ் என்று தனது காதலர் வாங்கிக் கொடுத்த பொம்மையோடு எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரியாமணி.

உணவு

ஹாரோல்ட்ஸ் நியூயார்க்கில் எனக்கும், முஸ்தபா ராஜுக்கும் இது தான் காலை உணவு. அதை பார்த்து நாங்கள் என்று அதிர்ச்சியான ஸ்மைலியை போட்டுள்ளார் பிரியா.

டைம்ஸ் சதுக்கம்

டைம்ஸ் சதுக்கத்தில் முஸ்தபா ராஜ், ஆர்யா மற்றும் டெல்சியுடன் மகிழ்ச்சியான இரவு என பிரியாமணி ட்வீட் செய்துள்ளார்.

மாஸ்க்

வாவ், இந்த முகமூடிகள் கூலாக உள்ளதா??? முஸ்தபாராஜ்...????ஹாஹாஹாஹா என ட்வீட் செய்துள்ளார் பிரியாமணி.

திருமணம்

திருமணம்

பிரியாமணி மூச்சுக்கு மூச்சு முஸ்தபா ராஜ் பற்றி தற்போது பேசுவதால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Actress Priya Mani who normally keeps quiet about her beau Mustafa Raj has tweeted about him a lot now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil