கண்ணடித்து நாட்டையே கலக்கிச்சே.. அந்த "ஹோம்லி" பிரியா வாரியரா இது? திக்குமுக்காடும் கவர்ச்சி
சென்னை : 2018 ம் ஆண்டு இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார் பிரியா.
பதிர் பருவ காதலை சொல்லும் இந்த படத்தில் கண்ணாலேயே காதல் பேசி, துப்பாக்கி இல்லாமல் கையாலேயே சுட்டு, அனைவரின் மனதையும் கவர்ந்தார். ஒரே படத்திலேயே செம ஹிட்டாகி விட்டார். இவர் ஹீரோவை பார்த்து கையால் சுடும் காட்சி, கண்ணடிக்கும் சீன்கள் செம வைரலாகின.

2018 ம் ஆண்டில் குகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா தான் இடம்பிடித்தார். ஒரு அடர் லவ் படத்தில் பிரபலமான இவருக்கு தெலுங்கில் செக், இஷாக் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு கன்னடம், இந்தி பட வாய்ப்புக்கள் கிடைத்தது.
தற்போது கன்னடத்தில் இவர் நடித்த விஷ்ணு பிரியா, இந்தியில் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா ஆகிய படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அடுத்ததாக மலையாளத்தில் கொல்லா என்ற படத்தில் நடிக்க உள்ளார். நடிகை, மாடல், பின்னணி பாடகியாக இருக்கும் பிரியா, சோஷியல் மீடியாவிலும் பிரபலமாக உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பல போட்டோஷுட் நடத்தி, போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இருந்தாலும் ஒரு அடர் லவ் படத்திற்கு பிறகு இவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் லேட்டஸ்டாக சிவப்பு நிற சட்டையில் ஒற்றை பட்டனை தவிர மற்ற பட்டன்களை கழற்றி விட்டு, செம கிளாமர் போட்டோஷுட் நடத்தி உள்ளார்.
படுக்கையில் அமர்ந்தும், படுத்தும், சோஃபாவில் சாய்ந்தும் இவர் நடத்தி உள்ள கவர்ச்சி போட்டோஷுட், இணையத்தில் செம டிரெண்டாகி வருகிறது. பிரியாவா இவர் என கேட்டு பலரும் ஆச்சரியமாக லைக்குகளை குவித்து வருகின்றனர். இவரை தற்போது 7 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
கழுத்திற்கு கீழ் போடப்பட்ட டாட்டு என்ன என்பதை நெட்டிசன்கள் ஜும் செய்து பார்த்து ஆராய்ந்து வருகின்றனர். இவரது இந்த போட்டோஷுட் செம வைரலாகி வருகிறது. இதுவரை 4 லட்சத்திற்கு அதிகமான லைக்குகள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











