»   »  வேட்டையாடும் ப்ரியாமணி

வேட்டையாடும் ப்ரியாமணி

Subscribe to Oneindia Tamil

வாய்ப்பு தேடும் வழக்கமான நடிகைகள் பாணியில் களமிறங்கிவிட்டார் ப்ரியாமணி.

தன் அழகை அள்ளிக் கொட்டும் போட்டோ செஷன் நடத்தி அட்டகாச லுக்குடன் ஆல்பங்களை கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டு வாய்ப்புவேட்டை நடத்தி வருகிறார்.

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் ஓடாததால், ப்ரியாமணியை தமிழ் சினிமா ஒதுக்கிவிட, ஜவுளிக் கடை பட்டுச் சேலைவிளம்பரங்களில் நடிக்கப் போய் விட்டார் இந்த முன்னாள் பெங்களூர் மாடல் கண்களால் கைது செய் படத்தைத் தான் பெரிதும்நம்பியிருக்கிறார்.

பாலக்காடு தான் பூர்வீகம் என்பதால் இந்த சேச்சிக்கு மலையாளத்தில் அவ்வப்போது ஒரு சில வாய்ப்புகள் வந்து கொண்டு தான்இருக்கின்றன. வினயன் இயக்கத்தில் சத்யம் என்ற படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட். அடுத்து, ஓட்ட நாணயம் என்ற படத்தில் மிகசென்சிட்டிவான கேரக்டரில் நடித்தார். இது பசி படத்தில் ஷோபா செய்தது போல ஒரு கேரக்டர்.

இதைத் தவிர பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் ஒரு அவார்டு படத்தில் நடித்தார். ஆனால், காசு விஷயத்தில் மகா கஞ்சர்களான மலையாளசினிமாவைவிட்டு ஓடி வருவதிலேயே ஆர்வமாக இருக்கிறார் ப்ரியா.

மலையாள சினிமாவா ஜவுளிக் கடை டிவி விளம்பரமா என்றால் இரண்டாவதையே இவர் தேர்வு செய்கிறார்.

அதே நேரத்தில் தமிழில் எப்படியாவது மீண்டும் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் காட்டுகிறார்.

பெரிதும் நம்பியிருக்கும் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் சேர்ந்து கவர்ச்சியிலும், நடிப்பிலும் கலக்கிவருகிறார். அப்படியே அடுத்த படத்துக்கும் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

பாலக்காடுதான் இவரது பூர்வீகம் என்றாலும், பிறந்து, வளர்ந்தது, படித்தது பெங்களூரில். இவரது உறவினர்தான் பின்னணிப் பாடகிமால்குடி சுபா, அதாவது அத்தை முறை வருமாம்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை மிக அழகாகப் பேசும் ப்ரியா மணி இப்போது தபால் மூலம் பி.ஏவும் படித்து வருகிறார்.

அது ஒரு கனாக்காலத்தில் தனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்துள்ளதா கூறும் ப்ரியா, இந்தப் படம் ரிலீசானால் நானும் முன்னணிஸ்டாராகி விடுவேன் என்கிறார், குட்டிக் கண்களில் நட்சத்திரங்கள் ஜொலிக்க.

சூட்டிங்குக்காக சென்னை வந்தால் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போடச் சொல்லி தயாரிப்பாளரின் தலையில் மசாலா அரைக்காமல், தனதுஅத்தை மால்குடி சுபாவின் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறார்.

அதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. சுபாவின் வீட்டில் நிறைய நாய்க் குட்டிகள் இருக்கின்றன. நாய்க்குட்டி என்றால் ப்ரியாவுக்குரொம்ப இஷ்டமாம்.

ப்ரியாவின் பெங்களூர் வீட்டில் நாய்க் குட்டிகள் வளர்க்க தடா போட்டுவிட்டாராம் தந்தை மணி.

ஆனால், தீவிர நாய்ப் பிரியையான ப்ரியாமணி, இதற்காகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தை சுபாவின் வீட்டில் டேரா போட்டுநாய்களுடன் கொஞ்சி விளையாடி மகிழ்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil