»   »  சல்சா ப்ரியா

சல்சா ப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரியா மணி ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் பலவித ஆட்டக் கலைகளை கற்றுக் கொண்டு வருகிறாராம். லேட்டஸ்டாக அவர் சேர்ந்துள்ள ஆட்டம் சல்சா.

கண்களால் கைது செய்ய பெங்களூலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் ப்ரியா மணி. பார்த்தவுடன் அட்டாக் பண்ணும் அழகுடன் முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்த ப்ரியா மணிக்கு ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இல்லை.

தொடர்ந்து பெரும் புள்ளிகளின் படத்தில் நடித்தும் கூட பிரேக் கிடைக்காமல் பேஸ்த் அடித்துக் கிடந்தார். இந்த நிலையில்தான் வந்தது பருத்தி வீரன். இந்த ஒரே படத்தில் உயரத்திற்குப் போய் விட்டார் ப்ரியா மணி.

ராசியில்லாத நடிகைகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டார் ப்ரியா. இப்போது அவர் கைவசம் சில தெலுங்குப் படங்கள் உள்ளன. அவற்றை முடித்து விட்டு தமிழில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம்.

ஹிட் நடிகை என்றாலே கூடவே வதந்திகளும் சேர்ந்து வரும் தானே. ப்ரியாவையும் விட்டு வைக்கவில்லை வதந்தி. தெலுங்கு நடிகர் ராஜவுக்கும், ப்ரியா மணிக்கும் ஜிகு ஜிகாவென்று காதல் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி.

ஆனால் அதில் விசேஷமாக எதுவும் இல்லை என்கிறார் ப்ரியா. இருவரும் நல்ல நண்பர்கள், வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை என்கிறார் ப்ரியா. நான் வெளிப்படையான பெண், எதையும் நான் மறைக்க மாட்டேன். ராஜாவுடன் எனக்கு வேறு மாதிரியான உறவு இருந்தால் நிச்சயம் அதையும் மறைக்க மாட்டேன் என்கிறார்.

டான்ஸ் என்றால் ப்ரியாவுக்கு உசுரு. அதனால்தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு டான்ஸை கற்று வருகிறாராம். லேட்டஸ்டக சல்சா டான்ஸ் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

ப்ரியாவின் அழகு ரகசியம் என்ன தெரியுமா. அவர் அரிசி சாப்பாட்டை தொடுவதே கிடையாதாம். தினசரி ஒரு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வாராம். கூடவே யோகாவும் உண்டாம்.

ப்ரியாவின் மனசுக்குள் ரொம்ப நாளாக ஒரு ஆசை விஸ்வரூபம் எடுத்து வருகிறதாம். ஸ்ரீதேவி, மூன்றாம் பிறையில் செய்தது போல ரோல் செய்ய வேண்டும் என்பதுதானாம் அது.

அய்யாக்களே, யாராச்சும் மூன்றாம் பிறையை ரீமேக் செய்தால் முதலில் ப்ரியாவைப் போய் பாருங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil