»   »  இனி இல்லை கிராமம்-ப்ரியா மணி

இனி இல்லை கிராமம்-ப்ரியா மணி

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரனால் புத்துயிர் பெற்ற ப்ரியா மணி, இனிமேல் கிராமத்து கேரக்டர்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

முத்தழகாக வந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒய்யாரமாக உட்கார்ந்து உசுப்பேத்தி விட்டுப் போனவர் ப்ரியா மணி. பருத்தி வீரனுக்கு முன்பு பல படங்களில் நடித்தும் தேறாமல் கிடந்த ப்ரியாவுக்கு, பருத்தி வீரன் செமையான பிரேக் கொடுத்தது.

ஆனால் இனிமேல் கிராமத்துக் கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என்று தடாலடியான முடிவை எடுத்துள்ளாராம் ப்ரியா. இதுகுறித்து தனது மேனேஜரிடம் ஸ்டிரிக்ட்டாக கூறி விட்டாராம். கிராமத்துக் கதையோடு இயக்குநரோ, தயாரிப்பாளரோ வந்தால் ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளாராம் ப்ரியா மணி.

இப்போது மலைக்கோட்டையில் விஷாலுடன் ஜோடி போட்டு நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ப்ரியா மணி. தனது லேட்டஸ் முடிவு குறித்து ப்ரியாவிடம் கேட்டபோது, அடிப்படையில் நான் நவ நாகரீக பெண். நகரத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். பருத்தி வீரன் ஹிட் ஆனதால் என்னைத் தேடி அதுபோன்ற கதையுடன் கூடிய படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

எல்லோருமே நான் பாவாடை, தாவணியில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் அமீர்தான் காரணம். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

ஆனால் முத்தழகி கேரக்டரிலேயே தொடர்ந்து நான் நடித்துக் கொண்டிருக்க முடியாது. இதுவரை 12 கதைகள் வரை கேட்டு விட்டேன். எல்லாமே கிராமத்து கதாபாத்திரங்கள்தான்.

ஆனால் நாகரீக மங்கையாக, அல்ட்ரா மாடர்ன் அலட்டல் பெண் கேரக்டரில் தோன்ற வேண்டும் என்பதே எனது ஆசை.

மலைக்கோட்டை வித்தியாசமான கதை. இந்தப் படத்துக்குப் பின்னர் எனது கேரக்டர் வெகுவாகப் பேசப்படும். இப்போது தமிழிலும், தெலுங்கிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதிக படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விருப்பப்படுகிறேன் என்றார் ப்ரியா மணி.

மாடர்ன் பொண்ணு கேரக்டரில் நடிக்க ஆசைப்படுவதாக கூறுகிறார் ப்ரியா மணி. ஆனால் அல்ட்ரா மாடர்னாக நடித்த கண்களால் கைது செய் படத்ததை விட, பாவாடை, தாவணியில் கைகளை வீசி நடந்து, கரட்டுக் குரலில் பேசி நடித்த பருத்தி வீரன் தான் தன்னைத் தூக்கி விட்டது என்பதை மனசின் ஒரு மூலையில் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டால் நல்லது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil