»   »  வில்லேஜை உடைக்க வில்லங்கம்!

வில்லேஜை உடைக்க வில்லங்கம்!

Subscribe to Oneindia Tamil

தன் மீது படிந்து விட்ட முத்தழகு இமேஜை காலி செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் ப்ரியா மணி, இதற்காகவே கிளாமர் ரோல்களைத் தேடிப் பிடித்து திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டி வருகிறாராம்.

கண்களால் கைது செய் மூலம் பாரதிராஜாவால் குட்டுப்பட்டு தமிழ் சினிமாவுக்கு வந்த ப்ரியா மணிக்கு அப்போது நேரம் சரியில்லை. இதனால் நல்ல வனப்புடன் இருந்தும் பட வாய்ப்புகள் சரிவர இல்லை.

இதனால் அப்செட் ஆகியிருந்த ப்ரியா மணி கிடைத்த படங்களை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் அமீர் மூலம் பருத்தி வீரன் வாய்ப்பு வந்து ப்ரியா மணியை ஒரேயடியாக தூக்கி நிறுத்தி விட்டது.

ஆனால் என்னே துரதிர்ஷ்டம், பருத்தி வீரன் முத்தழகு கேரக்டரைப் போலவே அத்தனை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கதை சொல்ல, அட, என்னடா இது வம்பாப் போச்சே என்று விசனப்பட்டுப் போனார் ப்ரியா மணி.

இதனால் தான் தமிழுக்கு பிரேக் விட்டு தெலுங்குக்குத் தாவினார். அங்கு இரண்டு படங்களை முடித்து விட்டு மீண்டும் மலைக்கோட்டை மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.

மலைக்கோட்டையில் ப்ரியா மணி இதுவரை இல்லாத வகையில் வகை தொகையின்றி கவர்ச்சி காட்டியுள்ளாராம். அதேபோல இனிமேல் நடிக்கப் போகும் படங்களிலும் படு மாடர்னாக, கிளாமராக நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

ஏன் இந்த கிளாமர் தோற்றம் என்று ஆராய்ந்து பார்த்தால், தன் மீது படிந்து விட்ட முத்தழகு இமேஜை உடைத்தே ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி இவராகத் தேடிப் பிடித்து கிளாமர் காட்டி வருகிறாராம்.

படத்தில் தனக்குரிய கிளாமர் காட்சிகளில், பசுமை குறைவாக இருந்தால் இவரே கலர் கூட்டி இயக்குநரை கலங்கடிக்கிறாராம். இயக்குநர் தரப்பில் கிளாமர் காட்டக் கோரி தயங்கினால், அதனால் என்ன அசத்திட்டாப் போச்சு என்று இவரே வலியக்கப் போய் கமிட் ஆகி கதி கலக்குகிறாராம்.

எண்ணை வழியும் அந்த முத்தழகு கேரக்டர் எனக்கு பிரேக் கொடுத்ததோடு நில்லாமல் பெரிய பிரேக்காகவும் மாறி விட்டதே என்று சில சமயங்களில் நெருங்கியவர்களிடம் விசனப்படுகிறாராம் ப்ரியா மணி.

16 வயதினிலே கூடத்தான் ஸ்ரீதேவிக்குப் பெரிய பிரேக் கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்து அவர் பல கேரக்டர்களில் கலக்கவில்லையா. அதுபோல நீங்களும் அசத்தலாம் ப்ரியா, கலங்காதீங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil