»   »  தோட்டா ப்ரியாமணி

தோட்டா ப்ரியாமணி

Subscribe to Oneindia Tamil

முன்னணி ஹீரோக்கள் தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் கடுப்பில் இருக்கிறார் முத்தழகுப்ரியாமணி.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரியாமணி நீண்ட நாட்கள் சும்மா இருந்த நிலையில் கிடைத்தது பருத்திவீரன்.

இந்தப் படம் ப்ரியாமணிக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்தது. அவரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

பருத்திவீரனில் நடித்த கதாநாயகன் கார்த்தி, சித்தப்பாவாக நடித்த சரவணன் ஆகியோர் புதிய வாய்ப்புகளுடன் பிஸியாகிவிட்டனர்.

ஆனால் முத்தழகு கேரக்டரில் அபாரமாக நடித்த ப்ரியாமணிக்கு இதுவரை சொல்லும்படியாக பெரிய பட வாய்ப்புகளோ, முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்போ கிடைக்கவில்லை.

நான் அவனில்லை ஹீரோ ஜீவனோடு தோட்டா என்ற படத்தில் நடிக்க மட்டுமே புதிய வாய்ப்பு வந்துள்ளதாம்.

இதைத் தவிர விஷாலுடன் மலைக்கோட்டை படத்தில் நடித்து வருகிறார். இது கூட பருத்தி வீரன் ரிலீசுக்கு முன்பே புக் ஆன படம் தான்.

அதே போல தெலுங்கில் அவர் நடித்த டாஸ் படம் ரிலீசான வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டு படுத்து விட்டதாம். இதில் கண் தெரியாத பெண்ணாக நடித்து பின்னியிருந்தார் ப்ரியாமணி.

இதனால் சோகத்தில் இருக்கும் ப்ரியாமணி, இப்போது ஜூனியர் என்.டி.ஆருடன் எமதர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நடிப்புக்கு வேலை கம்மி. கிளாமர் தான் வேலை. இதனால் கிளாமரில் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

ஸ்னேகா நடித்த புன்னகை தேசம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதிலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் ப்ரியாமணி. ஆனால், ஹீரோயின் அவர் அல்ல.

வருத்தப்படாதீங்க!, முன்னணி ஹீரோக்களோடு நடிக்க அக்கா, அண்ணி வேடத்துக்கு வாய்ப்பு வரும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil