»   »  ப்ரியா 'மசாலா' மணி!

ப்ரியா 'மசாலா' மணி!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ப்ரியா மணிக்கு நாக்கைக் கட்டுப்படுத்த முடியாதாம் - தோசையைப் பார்த்து விட்டால். அதிலும் மசாலா தோசை என்றால் நாக்கிலிருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடுமாம்.

ப்ரியா மணி படு ஜாலியானவர். எதிலும் கட்டுப்பாட்டை விரும்பாதவர். கவர்ச்சி காட்டுவதிலும் சரி, சாப்பாட்டிலும் சரி.

அவருக்கு மசாதா தோசை என்றால் ரொம்பப் பிடிக்குமாம். வாரத்திற்கு மூன்று முறையாவது மசாலா தோசையை ருசி பார்க்காவிட்டால் நாக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுமாம்.

எனக்கு மசாலா தோசை என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் நிறைய தோசைகளை சாப்பிட விடாமல் எனது டயட் கண்ட்ரோல் கட்டுப்படுத்துகிறது. இருந்தாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது தோசையை ஒரு பிடி பிடித்து விடுவேன். அதை மட்டும் என்னால் மாற்றிக் கொள்ளவே முடியாது.

இப்போது எண்ணெய் அதிகம் கலக்காத தோசைகளை விரும்பி விழுங்குகிறேன்.

எனக்குப் பிடித்த தோசைக் கடை பெங்களூரில்தான் உள்ளது. அங்கு மிக அருமையாக தோசை வார்த்துக் கொடுப்பார்கள். விட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக இருக்கும் என்று தோசை புராணத்தில் மூழ்கி விட்டார் ப்ரியா.

ஓவர் டூ விக்எண்ட் ஜாலி. சரி, வார இறுதி நாட்களில் என்ன செய்வீர்கள் என்று ப்ரியாவை டிராக் மாற்றியபோது, டான்ஸ் ஆடுவேன். டிஸ்கோ கிளப்புகளுக்கு அதிகம் போவேன். அங்குதான் எனது நடன தாகம் தீரும். டான்ஸ் ஆடும்போது மனசு லேசாகும், என்னை நானே புரிந்து கொள்ள, புதுப்பித்துக் கொள்ள அது உதவுகிறது. படங்களிலும் அது டான்ஸ் ஆடுவதற்கு உதவியாக இருக்கிறது என்றார்.

ப்ரியாவுக்கு நாலு மசாலா தோசை பாபாபாபாபார்சல்!

Read more about: priyamani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil