»   »  பிரியாமணியின் கவர்ச்சி 'தோட்டா'

பிரியாமணியின் கவர்ச்சி 'தோட்டா'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priyamani with Jeevan
ஜீவனுடன் இணைந்து நடித்து வரும் தோட்டா படத்தில் பிரியா மணி, கவர்ச்சியில் படு தாராளமாக இறங்கியிருக்கிறாராம்.

நீண்ட நாட்களுக்கு முன்பு பிரியா மணி ஒப்புக் கொண்ட படம் தோட்டா. ஜீவனுடன் இணைந்து நடிக்கும் இந்தப் படம், இடையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்த கேப்பில், பிரியா மணி மலைக்கோட்டையில் நடிக்கப் போய் விட்டார். ஜீவனும் மச்சக்காரன் படத்தில் பிசியாக இருந்தார். இந்தப் படங்களை முடித்து விட்ட இருவரும் கால்ஷீட் தந்ததால் தோட்டா படப்பிடிப்பு மறுபடியும் முடுக்கி விடப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

இந்தப் படத்திலும் ஜீவன் தனது முத்திரையைப் பதித்து நடித்து வருகிறாராம். கூடவே பிரியாமணியும், கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளாராம்.

பருத்தி வீரன் இமேஜை உடைக்க கிளாமர் முடிவை எடுத்த பிரியா மணி, நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் விதம் விதமாக கிளாமரில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தோட்டாவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு சீரும், சிறப்புமாக கிளாமரில் கலக்கியுள்ளாராம்.

ஜீவனுக்கும், ப்ளே பாய் படு பொத்தமாக இருப்பதால் படத்தில் வரும் கிளாமர் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற நம்பிக்கையில் தோட்டா யூனிட் உள்ளது.

அதேசமயம், மச்சக்காரன் பெரிய ரேஞ்சுக்குப் போகவில்லை என்பதால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் தோட்டாவில் படு கவனமாக நடித்து வருகிறாராம் ஜீவன்.

கவர்ச்சி தோட்டாவும், அதிரடி நாயகனும் இருக்கையில் படம் எப்படி விறுவிறுப்பில்லாமல் போகும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil