»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவின் இயக்கத்தில் கண்களால் கைது செய் படத்தில் நடித்து வரும் பிரியாமணிக்கு, அந்தப் படம்வெளியாகும் முன்னரே கோடம்பாக்கத்தில் பெரும் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது.

அடுத்தடுத்து 3 படங்களில் புக் செய்யப்பட்டுள்ளார் இந்த பெங்களூர் தேவதை. மேலும் பல படங்களில் நடிக்கவும்ஆபர்கள் குவிகின்றன.

ஏற்கனவே ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் புதுமுகம் ரோஷனுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர்,பாலுமகேந்திரா இயக்கும் அது ஒரு கனாக் காலம் படத்தில் தனுசுக்கு ஜோடியாய் நடிக்க இருக்கிறார்.

ரோமியோ ஜூலியட் படம் ரொம்ப நாளாய் எடுக்கப்பட்டு வருகிறது.

பைனான்ஸ் தொல்லையால் பாதியில்நிற்கிறது. இதனால் கண்களால் கைது செய் படம் தான் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறார் பிரியாமணி.

ஆனால், அதை எடுத்து முடிப்பதில் பாரதிராஜா வுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள். இதனால் பிரியாமணி அப்செட்ஆகியிருந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதால் குஷியாகவே இருக்கிறார்.

தனுஷுடன் இவர் ஜோடி சேரும் அது ஒரு கனாக் காலம் படம், கிளுகிளுப்பான காதல் கதை என்பதை நாம்ஏற்கனவே கூறியிருக்கிறோம்.

வயதில் மூத்த பெண்ணுடன் சின்னப் பையனுக்கு ஏற்படும் லவ் தான் கதை. இதில் சின்னப் பையன் தனுஷ். மூத்தபெண் ரம்யா கிருஷ்ணன். இடையில் ஜோடியாக பிரியாமணி!.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரியாமணி நடிக்கவுள்ள படம் உள்ளம். இரட்டை ஹீரோயின் கொண்ட இந்த்பபடத்தில் ஹீரோ கும்மாளம் படத்தில் நடிக்க மிதுன். இன்னொரு ஹீரோயின் தீபு. யுவன் சங்கர் ராஜாவின் இசையில்இது ஒரு மியூசிக்கல் கலாட்டா படமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil