»   »  அடிச்சு நொறுக்கனும்- ப்ரியாமணி

அடிச்சு நொறுக்கனும்- ப்ரியாமணி

Subscribe to Oneindia Tamil
 Priyamani

விஜயசாந்தி போல அடித்து நொறுக்கும் அதிரடி கேரக்டர்களில் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளேன் என்று கூறியுள்ளார் ப்ரியா மணி.

பாரதிராஜா, பாலுமகேந்திரா என பெரும் தலைகளின் கையால் குட்டுப்பட்டும் முன்னேற முடியாமல் முணகிக் கொண்டிருந்த ப்ரியா மணிக்கு அமீர் பருத்தி வீரன் மூலம் ஏற்றம் கொடுத்தார்.

உச்சத்திற்குப் போன ப்ரியா மணி இப்போது முழுக்க முழுக்க கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார். ஏன் என்று கேட்டால் முத்தழகி கேரக்டர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து ரசிகர்களை விடுவிக்க கிளாமர்தான் ஒரே வழி என்கிறார்.

விஷாலுடன் மலைக்கோட்டையில் குழைந்த ப்ரியா மணி தற்போது ஜீவனுடன் தோட்டாவிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.

கிராமத்துப் பெண்ணாகவும் நடித்தாயிற்று, கிளாமரிலும் கலக்கி வருகிறீர்கள். அடுத்து என்ன என்று ப்ரியாவிடம் கேட்டால், எல்லோருக்கும் ஒரு கனவு கதாபாத்திரம் இருக்கும். எனக்கு விஜயசாந்தி போல அதிரடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய உள்ளது.

அப்படிப்பட்ட கேரக்டருடன் கூடிய வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுப்பேன் என்றார்.

அதிரடி வேடத்திற்கேற்ற உடல் வாகு ப்ரியாவுக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக அவரது முரட்டுக் குரல் கதாபாத்திரத்திற்கு நிச்சயம் உயிர் கொடுக்கும் என்று நம்பலாம்.

ப்ரியா மணியை விஜயசாந்தியின் வாரிசாக்க பிரியப்படுவோர் உடனடியாக அவரை அணுகலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil