»   »  பிரியா மணி .. பிரமாதம்!

பிரியா மணி .. பிரமாதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
திரிஷாவை வேகமாக பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார் பிரியா மணி. கோலிவுட்டில் மட்டுமல்லாது, டோலிவுட்டிலும் பிரியா மணியின் கொடி வேகமாக பறக்க ஆரம்பித்துள்ளது.

இரு திரையுலகையும் சேர்ந்த பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிரியா மணி மீது பிரியம் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம். முன்னணி ஹீரோக்களும் கூட பிரியா மணியுடன் ஜோடி போட ஆர்வமாக இருக்கிறார்களாம்.

இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணம், பிரியா மணியின் தோழமையான அப்ரோச்சும், கலகலக்கும் கவர்ச்சி காஸ்ட்யூம்களும்தான்.

சில நாட்களுக்கு முன்பு டோலிவுட்டின் முன்னணி இளம் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர், பிரியா மணியை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். திறமையான நடிகை, திறமையான டான்ஸர் என ஜூனியர் என்.டி.ஆர். பிரியாவை ஏற்றி வைத்துப் பேசினார்.

அதேசமயம், யமதொங்கா படத்தில் தன்னுடன் நடித்தபோது, ஒரு டான்ஸ் காட்சியில் சில ஸ்டெப்ஸ்களை தவறாகப் போட்டார் பிரியா என்றும் லைட்டாக வாரி விட்டுச் சென்றார்.

முன்னணி தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜுவுக்கும் பிரியாவை ரொம்பப் பிடித்துள்ளது. அவரைப் பொறுத்தவரை, பிரியா மணி திறந்த மனதுக்காரர் (அதாவது பெருந்தன்மையானவர் என்று சொல்ல வருகிறார்), நன்கு ஒத்துழைப்பவர், யாருடன் நடித்தாலும் ஈடு கொடுத்து நடிப்பவர் என்று சர்டிபிகேட் தருகிறார் ராஜு.

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் பிரியா மணிதான் நாயகியாம். இவரது வேகமாக வளர்ச்சியைப் பார்த்து, நயனதாரவும், திரிஷாவும், இதுவரை முரண்டு பிடித்துக் கொண்டிருந்த இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தேடிப் போய் கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்துள்ளனராம்.

தமிழிலும் பிரியா மணி வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். மலைக் கோட்டை சக்சஸ் ஆகியுள்ளதால், பிரியா மணியின் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்தப் படத்தில் நடித்தபோது விஷாலுடன் படு தோழமையாக பழகினார். அதேபோலத்தான் தன்னுடன் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஹீரோக்களுடனும் நெருக்கமாக பழகுகிறார்.

பிரியா மணியின் அடுத்த இலக்கு விஜய் என்கிறார்கள். எப்படியாவது விஜய்யைப் (காக்கா) பிடித்து அவருடன் ஜோடி போட்டு விட வேண்டும் என்ற இலக்குடன் காய் நகர்த்தி வருகிறாராம் பிரியா மணி.

சமீபத்தில் விஜய் கொடுத்த 3 பார்ட்டிகளில் பிரியா மணியும் கலந்து கொண்டாராம். இந்த அறிமுகத்தை அடிப்படையாக வைத்து அட்டகாசமாக அட்டாக் செய்ய காத்திருக்கிறாராம்.

சரியான, அழகான ராட்சசியாக இருப்பார் போலிருக்கே!

Read more about: priyamani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil