»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருவது தெரிந்த கதை. இதில் தனுசுடன் ஜோடி சேர்ந்திருப்பதுஅழகுப் பதுமை பிரியா மணி.

விஷ்வா பிலிம்ஸ் தயாரிக்கும் உனக்கே உயிரானேன் என்ற இந்தப் படத்தில் பிரியாமணியை ரெக்கமண்ட்செய்ததே தனுஷ் வீட்டினர் தானாம்.

20 வயதே ஆன தனுசுடன் நடிக்க இளமையான ஹீரோயின்களாகத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்அவரை புக் செய்து வைத்திருக்கும் 13 தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், தனுசின் தந்தை கஸ்தூரி ராஜாவும்,அண்ணன் செல்வராகவனும்.

செல்வராகவனே இயக்கும் ஒரு படத்தில், இளம் ஹீரோயின் யாரும் சிக்காததால் காயத்ரி ரகுராமை உடல் மெலியவைத்து தனுசுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்.

பிரியாமணி நடித்த கண்களால் கைது செய், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்கள் இன்னும் வெளிவராதநிலையிலும் அவருக்கு கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது என்னவோ உண்மை.

இந் நிலையில் பிரியாமணியை உனக்கே உயிரானேன் படத்தில் புக் செய்திருக்கிறார் பாலுமகேந்திரா. படத்திற்குஇசை இளையராஜா.

இது தவிர எம்.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் உள்ளம் என்ற படத்திலும் பிரியா மணி நடிக்கிறார். கும்மாளம்படத்தில் நடித்த மிதுன் தான் இதில் ஹீரோ.

அவருக்கு பிரியா மணி தவிர தீபுவும் ஜோடியாக நடிக்கப் போகிறார்.இதன் ம முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் முடிந்துவிட்டதாம். அடுத்து நேபாளத்தில் சூட்டிங் நடக்கப்போகிறதாம்.

இந்தப் படத்தில் நடித்து வந்தாலும் தனுசுடன் நடிக்கப் போகும் உனக்கே உயிரானேன் படத்தைத் தான் பெரிதும்எதிர்பார்த்திருக்கிறாம் பிரியா மணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil