»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ப்ரியாமணி நடிக்க வந்தது காசு சம்பாதிப்பதற்காக அல்லவாம்; கலைச் சேவை புரிவதற்காம்.

கண்களால் கைது செய் படம் வெற்றி பெறாவிட்டாலும் அந்தப் படத்தில் நடித்த ப்ரியாமணி நிறைய பட வாய்ப்புகளைக் கைதுசெய்து விட்டார். ரோமியோ ஜூலியட், உள்ளம் ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்ட அவர் பாலுமகேந்திராவின் அது ஒருகனாக்காலம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தில் ஹீரோ தனுசுடன் ப்ரியாமணி படு நெருக்கம் காட்டி நடித்தார்.

ஆனால், தனுஷின் கால்ஷீட் குழப்பத்தால், இப்போது காலக்கெடு ஏதும் இல்லாமல் இந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ப்ரியாமணிக்கு ரொம்பவே வருத்தம்.

இதில் தனுசுடன் கவர்ச்சியில் பொளந்து கட்டிய ப்ரியாமணி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

இந்த ஒரு படம் மட்டுமல்ல, தனுஷ் நடிக்கும் நிறைய படங்கள் கால்ஷீட் குளறுபடியால் தட்டுத் தடுமாறித்தான் தயாராகிவருகின்றன. ஏவி.எம். நிறுவனத்துக்கே இதே போல் கால்ஷீட் சொதப்பல் செய்ய, அந்தப் படத்தையே அவர்கள் டிராப் செய்துவிட்டார்களாம்.

50 வருடங்களாக தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அந்த பெரிய நிறுவனத்துக்கே இந்த கதி என்றால், மற்ற தயாரிப்பாளர்கள் படும்பாட்டைச் சொல்ல வேண்டியதில்லை. இத்தனைக்கும் காரணம் தனுசின் அப்பா கஸ்தூரி ராஜாதான் என்று கூறுகிறார்கள்.

காசுக்கு ஆசைப்பட்டு வந்த இடத்தில் எல்லாம் கையை நீட்டி கோடிக்கணக்கில் அட்வான்ஸை வாங்கிவிட்டு கால்ஷீட் தரமுடியாமல் தனஷை திணற விட்டிருக்கிறார்.

இதனால் விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை ஓரங்கட்டியது போல், தனுசும் கஸ்தூரிராஜாவை ஓரங்கட்டிவிட்டாராம்.இருவரும் இப்போது பேசிக் கொள்வது கூட இல்லை என்கிறார்க.

இப்போது பேக் டூ ப்ரியாமணி..

அது ஒரு கனாக்காலம் படத்தில் அநியாயத்துக்கு கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே என்று கேட்டால், அந்த அம்மணி தந்த பதில்,

ஓவரா கவர்ச்சி காட்டினால் தமிழ் ரசிகர்கள் ஓரங்கட்டி விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். கேரக்டருக்கு தேவைப்பட்டால்மட்டுமே கவர்ச்சி காட்டி நடிப்பேன். என்னுடைய குடும்பம் வசதியான குடும்பம். காசு சம்பாதிப்பதற்காக நான் நடிக்கவரவில்லை. நடிப்பு பிடித்திருந்தால் சினி பீல்டுக்கு வந்திருக்கேன்.

கண்களால் கைது செய் ஹீரோ வசீகரனையும் என்னையும் பற்றி வந்த வதந்திகளைப் பார்த்து எனக்கு கோபம் வரவில்லை.நானும் ஒரு நடிகையாகி விட்டேன் என்ற பெருமைதான் வந்தது என்கிறார் பிலசாபிகலாக.

அது ஒரு கனாக்காலம் படத்தில் ப்ரியாமணிக்கு கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்துள்ளாராம் இயக்குனர்பாலுமகேந்திரா (அது சரி, துணியில்லாமல் நடிக்க வைத்தால்தான் தப்பு!).

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil