Don't Miss!
- News
15 நாட்களுக்கு முன் இறந்த நடிகை ஓஜா.. காதலரும் மர்ம மரணம்! நடிகைபோல் தூக்கில் தொங்கிய சடலம்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Lifestyle
சீனி பணியாரம்
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Automobiles
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கிளாமர் காட்டினால் தப்பில்ல.. இரண்டு படம் தான் ஹிட்.. தலைகால் புரியாமல் ஆடும் பிரியங்கா அருள்மோகன் !
சென்னை : கிளாமர் காட்டுவதில் தப்பில்லை, கவர்ச்சியாக உடை அணிவது மற்றும் நடிப்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம் என்று நடிகை பிரியங்கா அருள் மோகன் பேட்டியில் கூறியுள்ளார்.
கன்னடத் திரைப்படமான ஒன்ட் கதே ஹெல்லா திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
இதையடுத்து தெலுங்கில் நானியுடன் கேங் லீடர் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதை அடுத்து தமிழில் டாக்டர் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
கன்னட
நடிகர்
சதீஷ்
வஜ்ரா
கொடூர
கொலை...பதற
வைக்கும்
சிசிடிவி
காட்சிகள்

பிரியங்கா அருள்மோகன்
க்யூட்டான சிரிப்பு...ஆளை மயக்கும் வசீகரமான கண்ணு.. என இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருகிறார் பிரியங்கா அருள்மோகன். இவர் நடித்தது என்னமோ மூன்று படங்கள் தான் என்றாலும், பிரியாங்காவுக்கு ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகி மாறி மாறி இவரை புகழ்ந்து வருகின்றனர்.

டாக்டர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குடும்ப சென்டிமெண்ட் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது. பிரியங்கா அறிமுகமான முதல் திரைப்படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

முக்கிய கதாபாத்திரத்தில்
டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் லீட்ரோலில் நடித்து பெயர் எடுத்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ராசியான நடிகை
இதையடுத்து, அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி என இரு கெட்டப்பில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார் பிரியங்கா. அப்பா சென்டிமெண்ட் கொண்ட இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. இப்படி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ஹிட்டாகி உள்ளதால், பிரியங்கா ராசியான நடிகையாக மாறியுள்ளார்.

கிளாமர் காட்டுவதில் தப்பில்லை
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரியங்கா அருள் மோகன், கிளாமர் காட்டுவதில் தப்பில்லை என்றும், கவர்ச்சியாக உடை அணிவது மற்றும் நடிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றார். கதாபாத்திரத்திற்காக படங்களில் கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்தால் உடனே அவரைப் பற்றி தவறாக பேசக்கூடாது என்று கூறியுள்ளார். ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று கூறியிருந்தார்.

தலைகால் புரியவில்லையா?
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள கிளாமர் குறித்து கருத்து சொல்ல ஆரம்பிச்சீட்டீங்களா? அப்போ நீங்களும் கிளாமருக்கு மாறபோறீங்க என்பதை சொல்லாமல் சொல்றீங்க என்றும், நடித்ததே மூன்று படம் தான் அதுல இரண்டு படம் தான் ஹிட் அதுக்குள்ள தலைகால் புரியவில்லையா என்றும் இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.