»   »  ரகசிய கேமரா பயம்... அமெரிக்காவில் சொந்த வீடு தேடும் ப்ரியங்கா!

ரகசிய கேமரா பயம்... அமெரிக்காவில் சொந்த வீடு தேடும் ப்ரியங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹோட்டல்களில் தங்கும்போது ரகசிய கேமரா ஆபத்து நிறைய இருப்பதால், அமெரிக்காவில் சொந்த வீடு தேடுகிறேன் என்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளப் பக்கங்கள் மற்றும் குழுக்களில் அதிகம் உலா வருவது நடிகைகளின் அந்தரங்க படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள்தான். பெரும்பாலும் ஹோட்டல்களில் குளியல் அறைகளில் அவர்கள் குளிப்பதை ரகசிய கேமிராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் ஏற்றி விடுகிறார்கள்.

படுக்கை அறையில் இருக்கும் படங்கள், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் தப்புவதில்லை.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

இதற்காக போலீசில் புகார் செய்யப் பயந்து, அந்தப் படத்திலிருப்பது நானல்ல என்று கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள் நடிகைகள்.

"நான் ஹோட்டல்களில் தங்க பயப்படுவதே இந்தப் பிரச்சினைக்காகத்தான்" என்கிறார் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

இப்போது அவர் அடிக்கடி அமெரிக்கா போய் வருகிறார். டிவி ஷோ, ஹாலிவுட் படங்களில் நடிப்பது போன்ற காரணங்களுக்காக அங்கேயே ஹோட்டல்களில் தங்குகிறார். இந்தியாவைப் போல அமெரிக்க ஹோட்டல்கள் பாதுகாப்பற்றவை அல்ல. தனிமனித சுதந்திரத்தில் மிகுந்த அக்கறை கொண்ட நாடு அது. ஆனாலும் ப்ரியங்காவுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையாம்.

பயம்

பயம்

அவர் கூறுகையில், "நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை நான் அசவுகரியமாக நினைக்கிறேன். ரகசிய கேமராக்கள் பொருத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதனால் ஓட்டல்களில் நான் தங்குவது இல்லை. வெளிநாடுகளுக்கு போகும்போதும் ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன்.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவும் அடிக்கடி அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு ரகசிய கேமரா பயத்தினால் ஓட்டல்களில் தங்குவது இல்லை.

சொந்த வீடு

சொந்த வீடு

இதனால் அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நல்ல வீடு தேடி வருகிறேன்,'' என்றார்.

English summary
Due to hidden camera threat actress Priyanka Chopra is searching a new house to purchase in US.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil